/* */

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி சென்றது அனைத்துக் கட்சி குழு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி குழுடெல்லிக்கு சென்றது.

HIGHLIGHTS

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக    டெல்லி சென்றது அனைத்துக் கட்சி குழு
X

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு செல்லும் முன் அனைத்துக்கட்சி குழுவைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் பேட்டி அளித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று‌ தமிழக அனைத்துக்கட்சி குழுவினா் நீா்பாசனத்துறை அமைச்சரை சந்திக்கின்றனா்.

இந்த குழுவில் உள்ளதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டி;

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதி பெற்று இருப்பது தமிழ்நாட்டுக்கு செய்கின்ற துரோகம்.கர்நாடகாவில் உள்ள தமிழ்நாட்டு மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதை தடுப்பது தொடர்பாகவும் துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம்.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக மேகதாது அணை விவகாரம் உள்ளது. கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு சிறு துரும்பு அளவில் பாதிப்பு இருந்தாலும் அதன் எதிர்வினை பலமாக இருக்கும்.

தமிழ்நாட்டுக்கான நீர்வள உரிமையை முதலமைச்சர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு கூறினாா்.

Updated On: 16 July 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!