/* */

ஓ.பன்னீர்செல்வத்தின் குட்டிக்கதை சசிகலாவிற்கு பொருந்தாது:முன்னாள் அமைச்சர்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் குட்டிக்கதை சசிகலாவிற்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஓ.பன்னீர்செல்வத்தின் குட்டிக்கதை சசிகலாவிற்கு பொருந்தாது:முன்னாள் அமைச்சர்
X

சென்னை சேத்துப்பட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

சேத்துப்பட்டில் நடத்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது.

சிறுபான்மையினரை உணர்வுப் பூர்வமாக நேசிக்கும் இயக்கம் அதிமுக. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர் , அப்போது ஜெ. அரசு தமிழகத்தில் முழுமையான பாதுகாப்பு வழங்கி சிறுபான்மையினரை காத்தது.

கோவை குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக 1998 திமுக ஆட்சியில் குற்றமிழைத்தவர்களை தண்டிக்காமல் அப்பாவி இசுலாமியர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி , மசூதிக்குள் அத்துமீறி நுழைந்தனர் . குறிப்பாக டிசம்பர 6 ல் இசுலாமியர்களுக்கு அதிக பயம் இருந்தது. கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறந்து , கிறிஸ்துமஸ் பெருவிழா நடத்தும் ஒரே கட்சி அதிமுக.

மனத குலம் தோன்றியது முதல் தவறிழைத்தல் இயல்பு. ஆனால் திருந்தி வாழுவது மனித குலத்தின் சிறப்பு. சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்பதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளர்களும் உறுதியாகவே இருக்கிறார்கள்.

சசிகலா இணைப்பு அர்த்தத்தில் ஓபிஎஸ் குட்டிக் கதை கூறவில்லை. சசிகலாவை சேர்க்க கூடாது என கட்சியினர் அனைவரும் ஒரே எண்ணத்தில் இருக்கிறோம்.

ஓபிஎஸ் கூறிய கதைக்கு கண் காது மூக்கு வைத்து உருவம் கொடுக்காதீர். அந்த கதை பாமரர்களுக்கே பொருந்தும் , சசிகலாவுக்கு பொருந்தாது.

சசிகலா இணைப்பு குறித்த அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை கருத்து கூறக் கூடாது , கருத்து கூறினால் அது தவறு என்று கூறினார்.

மீனவர் கைது உட்பட எந்த ஜீவாதார பிரச்சனை குறித்தும் நாடாளுமன்றத்தில் திமுகவினர் பேசவில்லை. டெல்லியில் போண்டா , பஜ்ஜி சுண்டல் சாப்பிட்டு உல்லாசமாக இருக்க தமிழக மக்கள் அவர்களை அனுப்பவில்லை, திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு மீனவர் கைது நடவடிக்கை இல்லாதவாறு மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதயநிதி , இன்பநிதி , சபரீசன் , கனிமொழி காம்ப்ளக்ஸ்களை திமுக புதிதாக உருவாக்கி கொள்ளட்டும் , ஆனால் ஜெயலலிதா பெயரில் உள்ள கட்டட பெயரை மாற்ற வேண்டாம்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

ஆவடி நாசர் ஒரு பன்மொழிப் புலவர் , உத்தம புத்திரன். அவரது மகன் ஆவடி பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

Updated On: 20 Dec 2021 5:56 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?