/* */

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்: எம்பி திருமாவளவன்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இடதுசாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணி வெற்றிகரமாக முன்னோடியாக இயங்குகிறது

HIGHLIGHTS

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்: எம்பி திருமாவளவன்
X

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொல்.திருமாவளவன் எம்பி.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக அணைத்துக்கட்சி கூடத்தினை தமிழக முதலமைச்சர் கூட்ட வேண்டும் என திருமாவளவன் எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உலக மகளிர் நாள் விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விசிக வேட்பாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அஞ்சுகம் மண்டபத்தில் நடைபெற்றது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் , தேர்தல் களத்தில் உயிர் நீத்த பாப்பாப்பட்டி சுப்பன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற துணை மேயர் பேரூராட்சி தலைவருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் மேலும் கூறியதாவது:நடைபெற்று முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது என்பதை பலரும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மற்றும் ஆதரவாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அது ஒன்றும் பெரிய வெற்றி அல்ல. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஏற்கெனவே அவர்கள் உத்திரப்பிரதேசத்தில் பிஜேபி முன்பு வெற்றி பெற்றிருந்த தொகுதிகளை விட இப்போ வெற்றி பெற்றிருக்கும் தொகுதிகளில் எண்ணிக்கை சரிந்து இருக்கிறது.

2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இதேபோன்று நிலைப்பாட்டை எடுத்தால் தெரிந்தே வேண்டுமென்றே திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு வரவேற்பதற்காக செய்கிறார்கள் என்றுதான் கருதிக் கொண்டிருக்கும். உத்திரபிரதேசத்தில் நடந்திருப்பது அதுதான்.

மறைமுக தேர்தல் நடைபெற்றது இந்த முறை மாற்றப்படவேண்டும் நேரடியாக மக்கள் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுப்பது போல ஒன்றியக் குழுவின் தலைவரை மாவட்ட குழு தலைவரை நகர மன்ற தலைவரை, மேயரை மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்க கூடிய வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளால் கைப்பற்ற இயலாமல் போய்விட்டது. உடனடியாக திமுக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் தம்முடைய திமுக போட்டி வேட்பாளர்களை பதவியை ராஜினாமா செய்யும்படி அறிக்கை வெளியிட்டது அரசியல் நாகரிகத்தின் ஒரு உச்சநிலை அதற்காக அவருடைய பண்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார பாராட்டும். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் அகில இந்திய அளவில் சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரால் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது ஒரு அரசியல் முன்னணியாக ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருப்பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இடதுசாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணி வெற்றிகரமாக இயங்குகிறது. இந்தியாவுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடி ஆகியிருக்கிறது .வழிகாட்டியாக இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு காங்கிரசோடு இணைந்து இடதுசாரிகளை இணைத்து சக்திகளை வீழ்த்த வேண்டும் என்ற வியூகத்தை அமைத்து அதில் வெற்றி பெற்று சாதித்த ஒரு மாநிலமாக தமிழ்நாடு ஒரு கட்சியாக விளங்குகிறது.

புதுச்சேரியில் 4 வழி சலைக்காக நினைவு தூண்கள் அகற்றம். 4 வழிச்சாலையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் அமைக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. புதுச்சேரியில் முத்தமிழ் நுழைவாயில், காமராஜர் நினைவு தூண் இடிக்கப்பட்டிருப்பது காமராஜருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது இதனை நான் கண்டிக்கிறேன் என்றார் தொல்.திருமாவளவன் எம்பி.

Updated On: 14 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...