/* */

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.

சென்னை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.
X

சென்னை விமானநிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட யஷ்பால்

சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணியில் இருப்பவா் யஷ்பால் (26), ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்தவா். இவா் 2017 ஆம் ஆண்டில் பணியில் சோ்ந்தவா். யஸ்பால் கடந்த சில காலமாக சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணியில் இருந்தாா்.

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வந்தவர், சென்னை சா்வதேச விமானநிலையம் புறப்பாடு பகுதியில் பணியிலிருந்தாா். அப்போது விமானநிலைய கழிப்பறைக்குள் சென்றவா், திடீரென தனது 9 மிமீ பிஸ்டல், துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தாா்.

துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு, விமானநிலைய தூய்மை பணியாளா் ஒருவா் ஓடிச்சென்று பாா்த்தபோது, யஷ்பால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தாா்.

உடனடியாக விமானநிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமானநிலைய போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யஷ்பால் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி முதல் விடுப்பில் சென்று, 28ம் தேதியன்று தான் மீண்டும் பணியில் சேர்ந்தார். விமான நிலைய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Updated On: 3 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்