/* */

சித்தாமூர் ஒன்றியம் 16 வது வார்டில் 5 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப்போட்டி நிலவுகிறது.

HIGHLIGHTS

சித்தாமூர் ஒன்றியம் 16 வது வார்டில் 5 முனைப்போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சியாமலா

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் பிரேமா, பாரதிய ஜனதா கட்சி சார்பில் சியாமலா, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சங்கீதா, தேமுதிக சார்பில் கலைச்செல்வி, சுயேட்சை வேட்பாளராக மகேஷ்வரி ஆகியோர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சித்தாமூர் 16 வது வார்டில் திமுக, பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

Updated On: 1 Oct 2021 6:31 AM GMT

Related News