/* */

இந்து அறநிலையத்துறை கோயில்களில் உழவாரப்பணிகள் இணையவழி பதிவு

இந்து அறநிலையத்துறை கோயில்களில் உழவாரப்பணிகள் இணையவழி பதிவு
X

அமைச்சர்கள் கீதா ஜீவன், சேகர் பாபு.

தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் வழிகாட்டுதல்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் இணையவழி பதிவு செய்துக்கொள்ளும் புதிய வசதி இன்று துவங்கப்பட்டுள்ளது.

இதனை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகக் கூட்ட அரங்கில் துவங்கி வைத்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கடந்த 10 ஆண்டுகளாக பாழடைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறையை நல்ல நிலையில் கொண்டு செல்லவும், சேதமடைந்து பாதிக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளோம். ஆகம விதிப்படி 12 நாட்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தவும் மற்றும் கோவில்களுக்கு தேவையான பார்க்கிங் வசதிகள், தெப்பக்குளம், நந்தவனம், போன்றவற்றை சீரமைப்பது போன்ற செயல்களில் அறநிலையத்துறை மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு படியாக, தற்போது 47 திரு கோவிகளில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள பக்தர்கள் எளிமையாக கோயில் நிர்வாகத்தை அணுகவும், காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும்,புதிதாக இணைய வழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை 100 ஏக்கருக்கு மேற்பட்ட திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டெடுத்துள்ளது. மீட்கப்பட்ட நிலங்கள், கோவில்களின் வருமானத்தை பெருக்கும் விதத்தில் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 36,000 திருக்கோவில்கள் உள்ளதாகவும், அதில் 12000 கோவில்கள் ஒரு காலா பூஜை நடைபெறும் கோவில்களாக உள்ளது. அனைத்து கோவிகளில் ஒரு கால பூஜையாவதும் நடைபெற வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

25 நாட்களில் 170 கோவிகளுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதி தரப்பட்டு உள்ளதாகவும் அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டுவிடும். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் நியமனம் பற்றி கேட்ட கேள்விக்கு பாகிஸ்தான்,அல்லது அமெரிக்கன் சிட்சன்களை அரங்காவர்களாக பணி நியமனம் செய்ய போவது இல்லை என்றும் தமிழகத்தை சேர்ந்தவர்களை மட்டும் தான் பணி நியமனம் செய்வோம் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட அர்ச்சகர்களுக்கு படிப்படியாக பணி நியமனம் வழங்கப்படும். பக்தர்கள் உழவார பணி பணி செய்ய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை படுத்தம்படும்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் கடந்த பல ஆண்டுகளாக உழவாரப்பணிகள் செய்ய ஆர்வம் உள்ள தன்னார்வல குழுக்கள் மூலமாக பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனை எளிமைப்படுத்தும் வகையில் இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதி www.hrce.tn.gov.in சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்ய விருப்பம் உள்ள நபர்கள் எளிய முறையில் தங்களுக்கு உகந்த தேதி, நேரம், செய்யும் பணியினைத் தாங்களே தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து உரிய அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம்.

திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் இணையவழி மூலம் பதிவு செய்யும் முறை இந்து அறநிலையத்துறையின் இணைய வழி முகவரியான https://hrce.tn.gov.inக்குள் சென்று பதிவு செய்துகொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

Updated On: 27 July 2021 4:55 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!