/* */

செங்கல்பட்டில் தலையில் அம்மிக்கல்லை போட்டு இளைஞர் கொடூரக் கொலை

செங்கல்பட்டில் தலையில் அம்மிக்கல்லை போட்டு இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் தலையில் அம்மிக்கல்லை போட்டு இளைஞர் கொடூரக் கொலை
X

கொலை செய்து கைதான அஜித்.

செங்கல்பட்டு கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் வயது 35. இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒயிட் அண்ட் கோ என்ற தனியார் கம்பெனியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் செங்கல்பட்டு பெரியார் நகரில் வாடகை வீடொன்றில் ஓட்டுநர்களுக்கு அறை எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு நேற்று வழக்கம்போல் விஜயகுமார் வேலையை முடித்துவிட்டு அறைக்கு வந்து படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது இவரது சக நண்பரான அஜித் என்பவர் திடீரென அங்கு வந்து அருகிலிருந்த பெரிய அம்மிக்கல்லை தூக்கி விஜயகுமார் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அஜித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தினமும் அஜித் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டும்போது குடிபோதையில் இருந்தார். இதனை முதலாளி சரவணனிடம் விஜயகுமார் சொல்லியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அஜித் குடிபோதையில் சக ஓட்டுநரான விஜயகுமாரை கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?