/* */

வாக்காளர் பட்டியலில் குளறுபடி: அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி என பொதுமக்கள் புகாரால் அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு.

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியலில் குளறுபடி: அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு
X

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி துனை அலுவலர் பிரேமலதா வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் கடந்த 31-ஆம் தேதி கிராம ஊராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டது.

இதில் மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், நெடுங்குன்றம், ஊனைமாஞ்சேரி, வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், குமிழி, காரணைப்புதுச்சேரி, காயரம்பேடு, பெருமாட்டுநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் பயங்கர குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், வாக்காளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் காட்டாங்கொளத்தூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரிகிருஷ்ணன், சசிகலா ஆகியோரிடம் சென்று தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

அந்த புகாரில் கூறுகையில், ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள வாக்காளர்களின் பெயர்களும், இதேபோல் உள்ளாட்சி மன்ற தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் பெயர்களும் மேலும் அவர்களது குடும்பத்தினரின் பெயர்களும் அதே வார்டில் இல்லாமல், வெவ்வேறு வார்டுகளில் மாறி, மாறி இடம் பெற்றுள்ளன. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளன.

எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்திற்கு சென்று முறையிடுவோம் என்றனர். இதனையடுத்து பொதுமக்கள் கூறிய புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி துனை அலுவலர் பிரேமலதா ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று நேற்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, வாக்காளர்கள் கூறியபடி பல ஊராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வாக்காளர்கள் பெயர்கள் மாறி மாறி இருப்பது உண்மைதான் என்றும், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் இதனை சரி செய்யப்படும் என்றார்.

Updated On: 11 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?