/* */

கூடுவாஞ்சேரி அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கூடுவாஞ்சேரி அருகே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரி அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
X

காவல் வாகனத்தில் மோதி நிற்கும் ரவுடிகள் வந்த கார், (உள்படம் -  சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள்)

மண்ணிவாக்கம் ரமேஷ், ஓட்டேரி சோட்டா வினோத் ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி தொடர்பாக ஓட்டேரி, வண்டலூர், கூடுவாஞ்சேரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

10 நாட்களுக்கு முன்னதாக திமுக பிரமுகரை வெட்டிக்கொலை செய்ய முயற்சி செய்ததுடன், தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரவாக தேடிவந்தனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் கீரப்பாக்கம்- காரணை புதுச்சேரி பிரதான சாலையில் வாகன சோதனையைில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ரமேஷ், சோட்டா ஆகியோர் காரில் வேகமாக வந்துள்ளனர்.

அப்போது உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் அவர்கள் வந்த காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது காவல் வாகனம் மீது ரவுடிகள் வந்த கார் பயங்கரமாக மோதி நின்றன. இதில் சிகுருநாதன் லேசான காயம் அடைந்துள்ளார்.

ரவுடிகள் இருவரும் காரில் இருந்து இறங்கி காட்டிற்குள் தப்பி ஓடியுள்ளனர். அப்போது காவல்துறையினர் விரட்டி சென்று அவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ரடிவுகள் இருவரும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் சிவகுருநாதன் காயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து காவல் ஆய்வாளர் முருகேசன், ரவுடிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்துள்ளதாக தெரிகிறது. உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரவுடி சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ரமேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Updated On: 2 Aug 2023 5:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...