/* */

வண்டலூர் பூங்காவுக்கு விலங்கு பரிமாற்ற முறையில் வந்த புலி, பாம்பு, மண்ணுளி பாம்பு

2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப் புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்பு, ஒரு ஜோடி விட்டேக்கர் மண்ணுளி பாம்பு புதிதாக வந்துள்ளன

HIGHLIGHTS

வண்டலூர் பூங்காவுக்கு விலங்கு பரிமாற்ற முறையில் வந்த  புலி, பாம்பு, மண்ணுளி பாம்பு
X

வண்டலூர் பூங்காவில் விலங்கு பரிமாற்ற முறையில் 2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப் புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்பு, மற்றும் ஒரு ஜோடி விட்டேக்கர் மண்ணுளி பாம்பு ஆகிய விலங்கினங்கள் புதிதாக வந்துள்ளது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் டாக்டர் கே.சிவர்மா காந்த் பிலிகுலா உயிரியல் பூங்கா மங்களூரு கர்நாடகம் இடையேயான விலங்கு பரிமாற்றத் திட்டத்திற்கு, புது தில்லியிலுள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி இரு உயிரியல் பூங்காக்களும் 1.05.2022 முதல் 05.05.2022 வரை விலங்கு பரிமாற்றத்தை மேற்கொண்டனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் வெள்ளைப் புலி மற்றும் ஒரு பெண் நெருப்புக்கோழியை கால்நடை மருத்துவர், உயிரியலாளர் மற்றும் சீருடைப் பணியாளர்கள் அடங்கிய குழுவுடன் பிலிகுலா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.



மேலும் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து 2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப் புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்பு, மற்றும் ஒரு ஜோடி விட்டேக்கர் மண்ணுளி பாம்பு ஆகிய விலங்குகள் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.

இரண்டு உயிரியல் பூங்காக்களும் ஒப்புதல் வழங்கப்பட்ட விலங்குகளை பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது. வந்துள்ள விலங்குகள் தனிமைப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு கால்நடை மருத்துவர்களின் மருத்துவ சான்றிதழ்படி விலங்குகள், விலங்கு இருப்பிடத்திற்கு மாற்றப்பட்டு பார்வையாளர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Updated On: 5 May 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்