/* */

ரியல் எஸ்டேட் அதிபர் வெடிகுண்டு வீசி படுகொலை

காவலர் சுட்டதில் கொலையாளி ஒருவர் பலி, மூன்று பேர் தப்பியோட்டம்.

HIGHLIGHTS

ரியல் எஸ்டேட் அதிபர் வெடிகுண்டு வீசி படுகொலை
X

செங்கல்பட்டு அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெடிகுண்டு வீசி கொலை: தப்ப முயன்ற கொலையாளிகள் மீது அவரது பாதுகாவலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழப்பு 3 பேர் தப்பியோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் வசித்து வருபவர் திருமாறன் வயது 52 இவர் உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் மேன் பவர் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.


இந்த நிலையில் இன்று திருமாறனுக்கு திருமண நாள் என்பதாலும் பிரதோஷ நாள் என்பதாலும் அவரது வீட்டின் அருகே உள்ள முத்துகுமார சுவாமி கோயிலில் சிறப்பு அன்னதானம் செய்துள்ளார். இதனை நோட்டமிட்ட 4 மர்ம நபர்கள், திருமாறன் கோயிலில் இருந்து வெளியே வரும்போது, கையில் வைத்திருந்த வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த திருமாறன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இதனை கண்ட அவரது பாதுகாவலர் கொலையாளிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். அவனுடன் வந்த 3 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த மறைமலை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளார். மேலும் தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கச்சூர் பகுதியில் திருமாறன் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்ச்சித்தது குறிபிடத்தக்கது

Updated On: 25 April 2021 12:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!