/* */

பொத்தேரி தனியார் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கிவைத்தார்

பொத்தேரி தனியார் கல்லூரியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ராகுல் நாத் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

பொத்தேரி தனியார் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கிவைத்தார்
X

பெத்தேரி தனியார் கல்லூரியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்து பேசினார்.

செங்கல்பட்டு மாவடம் பொத்தேரி எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் உள்ள உணவக மேளாண்மை கல்லூரியில் உணவு வணிகர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தனியார் நிறுவனங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் உள்ள உணவக மேளான்மை தனியார் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் கலந்துகொண்டு 200 பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை துவக்கிவைத்தார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர்:- கொரொனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எந்நேரத்திலும் மாவட்ட ஆட்சியரகத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால், அவர்களது பகுதிகளுக்கே வந்து நோய் தடுபுத்துறை சார்பில் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,

நமது குறிக்கோள் நூறு சதவிகிதம் கொரோனா தடுப்புசி அனைவரும் செலுத்தி பெருந்தொற்றை தடுக்கவேண்டும். அதற்காக பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என அவர் கூறினார்.

Updated On: 4 Aug 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?