பரனூர் சுங்கச்சாவடி அருகே கொரோனா விழிப்புணர்வு சாலைபாதுகாப்பு வாரவிழா

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலைபாதுகாப்பு வாரவிழா நடைப்பெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பரனூர் சுங்கச்சாவடி அருகே கொரோனா விழிப்புணர்வு சாலைபாதுகாப்பு வாரவிழா
X
பரனூர் சுங்கச்சாவடி அருகே சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கசாவடி அருகே தமிழ்நாடு அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைப்பெற்றுது. சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு 24 மணி நேர மருத்துவ குழு பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு தார்ப்பாய்கள் வழங்கினர்.

அதே போன்று கனரக வாகனங்களில் இரவில் ஒளிரும் பட்டைகளை மணல் லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் யுவராஜ் கலந்து கொண்டு வழங்கினார். கனரக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றி யுவராஜ் லாரி ஓட்டுநர்களுக்கு தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுவராஜ், கனரக வாகனங்களில் அதிக பாரத்தை ஏற்றி செல்வதை குறைத்தால் வாகன விபத்தை தடுக்கமுடியும் என தெரிவித்தார். சாலை பாதுகாப்பு வாரவிழாவில் லாரி ஓட்டுநர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு, மாஸ்க் அணிவதன் கட்டாயம் போன்ற அறிவுகளை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கனரக லாரி ஓட்டுநர்கள் சாலைபாதுகாப்பு வாரத்தில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள இந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் 24 மணி நேர மருத்துவ உதவி குழு இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் 1யூனிட் மணல் 1000 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.

Updated On: 24 Jan 2022 10:07 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா
 2. காஞ்சிபுரம்
  காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட...
 3. கிணத்துக்கடவு
  மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. 'நட்பூ' போற்றும் விழா..!
 4. புதுக்கோட்டை
  தலைமுடியால் வேனை இழுத்து சாதனை படைத்த மாணவிக்கு அமைச்சர் மெய்யநாதன்...
 5. புதுக்கோட்டை
  அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு ஆக.27, 28 -ல் புதுக்கோட்டையில்...
 6. இந்தியா
  மகாராஷ்டிரத்தில் ஷிண்டே அரசு ஜூலை 4 ல் பெரும்பான்மை நிரூபிக்க...
 7. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்
 8. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் 5 சிறந்த கல்வியியல் கல்லூரிகள்
 9. நாமக்கல்
  நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
 10. விழுப்புரம்
  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்