/* */

செங்கல்பட்டில் ரூ.102-ஐ தொட்டது பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் கவலை

செங்கல்பட்டில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது; பெட்ரோல் விலை ரூ.102 ஐ நெருங்கியது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் ரூ.102-ஐ தொட்டது பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் கவலை
X

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. அதன் பிறகு கொரோனா 2-ம் அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

செங்கல்பட்டில், நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ 101.75 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 95.67 ஆகவும் விற்பனையானது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 101.97 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ 95.96 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்தனர்.

Updated On: 5 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா