/* */

செங்கல்பட்டு: சூரைக்காற்றுடன் பலத்தமழை- விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சூரைக்காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: சூரைக்காற்றுடன் பலத்தமழை- விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
X

செங்கல்பட்டு பகுதிகளில் பெய்த மழை.

வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் தொடர்ந்து வட தமிழகமான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

சென்னையின் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, குரோம்பேட்டை, பல்லாவரம், பள்ளிக்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், திருநீர்மலை, படப்பை, திருப்போரூர், மாமல்லபுரம், தாம்பரம், மதுராந்தகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

குளிர் காற்று வீசி வந்த நிலையில் இன்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் திடீரென சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

கோடைகாலத்தில் பெய்துவரும் இந்த மழையால் காய்ந்து உள்ள நீர்நிலைகள் சற்றே நீர் நிரம்பி வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 13 Jun 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?