/* */

பாரத் பயோடெக் தடுப்பூசி நிறுவனத்தில் உயர் அலுவலர்கள் 7 மணிநேரம் ஆய்வு!

செங்கல்பட்டு பாரத் பயோடெக் தடுப்பூசி மையத்தில் உயர் அலுவலர்கள் சுமார் 7 மணிநேரமாக திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

பாரத் பயோடெக் தடுப்பூசி நிறுவனத்தில் உயர் அலுவலர்கள் 7 மணிநேரம் ஆய்வு!
X

செங்கல்பட்டு பாரத் பயோடெக் தடுப்பூசி நிறுவனம்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட திருமணி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்துக்கு கடந்த 2012ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு "தேசிய முக்கியத்துவ திட்டம்" என்று ஒப்புதல் அளித்தது.

நாட்டின் தடுப்பூசி தேவையில் 75% எச்பிஎல் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளப்படும். மீதமுள்ள தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம் என ஒப்பந்தம் உள்ளது.

100 ஏக்கர் பரப்பளவில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் தடுப்பூசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதில், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி. ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் உள் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வு தளவாடங்கள் அனைத்தும் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் வைகையில் தயார் நிலையில் உள்ளது.

இப்பணிகளில் பயோ டெக்னாலாஜி பயின்ற வல்லுநர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவு ரூ.594 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாமதமானதால், 2017ம் ஆண்டில் ரூ.710 கோடியாகவும், 2019ம் ஆண்டில் ரூ.904.33 கோடியாக அதிகரித்தது.

மீண்டும் திருத்தப்பட்ட ரூ.904.33 கோடியாகத் திட்டச் செலவு விரிவாக்க அறிக்கையை 2018ம் ஆண்டு சமர்ப்பித்தது. ஆனால், நிதி அமைச்சகம் திட்டத்தின் முன்மொழிவு சாத்தியமில்லை எனக்கூறி நிதி ஒதுக்க நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து வசதிகளும் இந்த நிறுவனத்திற்கு இருப்பதால் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த மாதம் பொறுப்பேற்ற திமுக முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்எல்எல் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அந்த நிறுவனத்தை நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் மத்திய அரசாங்கத்திற்கும் பல கடிதங்களை எழுதி உள்ளார். மேலும் அமைச்சர்களை நேரில் அனுப்பியும் வலியுறுத்தினார். இந்த நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசாங்கம் எந்த ஒரு பதிலும் அளிக்காத நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை நேரில் அழைத்து இந்நிறுவனத்தில் தடுப்பூசிகளை தயாரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுசித்ரா, செயல் இயக்குனர் சாய் பிரசாந்த் ஆகியோர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு செங்கல்பட்டு எச்எல்எல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர் . இந்த ஆய்வானது 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது, இதில் சில எந்திரங்களை அதிகாரிகள் இயக்கச் சொல்லி பார்வையிட்டுள்ளனர்.

Updated On: 4 Jun 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  3. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  4. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  5. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  9. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்