/* */

வண்டலூர் அருகே பைக்கில் வந்த தம்பதியிடம் 10 சவரன் தங்க தாலி செயின் பறிப்பு

வண்டலூர் அருகே பைக்கில் வந்த தம்பதியிடம் 10 சவரன் தங்க தாலி செயினை அறுத்துவிட்டு, மற்றொரு பைக்கில் வாலிபா்கள் இருவா் தப்பியோட்டம்.

HIGHLIGHTS

வண்டலூர் அருகே  பைக்கில் வந்த தம்பதியிடம் 10 சவரன் தங்க தாலி செயின் பறிப்பு
X

சென்னை பூந்தமல்லியை சேர்ந்த முகுந்தன்.இவா் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவா்களின் உறவினா்கள் தாம்பரம் அருகே முடிச்சூரில் வசிக்கின்றனா். அவா்கள் வீட்டில் நடக்கும் ஒரு விஷேசத்தில் கலந்து கொள்வதற்காக முகுந்தன் இன்று காலை 11 மணி அளிவில் தனது மனைவி ஹேமலதாவுடன் இருசக்கர வாகனத்தில் வண்டலூர் அவுட்டா் ரிங் ரோடு வழியாக தாம்பரம் முடிச்சூருக்கு வந்து கொண்டிருந்தாா்.

முடிச்சூா் அருகே சா்வீஸ் சாலையில் வந்தபோது,பின்னால் இரு சக்கர வாகனத்தில் தொடா்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் ஹேமலதா அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை பறித்தனா். இதனால் ஹேமலதா கூச்சல் போட்டாா். இதையடுத்து முகுந்தன்,செயின் அறுப்பு ஆசாமிகளை பிடிக்க முயன்றபோது, தவறி சாலையில் விழுந்து சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இந்த காட்சியை பாா்த்த மற்ற வாகன ஓட்டிகள் செயின் அறுப்பு திருடா்களை பிடிக்க பின்னால் விரட்டி சென்றனா். ஆனால் செயின் அறுப்பு திருடா்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனா்.

இதையடுத்து செயினை பறிகொடுத்த தம்பதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.உடனடியாக பீர்க்கண்காரணை போலீசாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா்.அதோடு வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டபகலில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 10 Aug 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!