/* */

விவசாய நிலத்தின் பட்டா ரத்து, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

50 ஆண்டுகளுக்கு மேலாக பயிர் செய்த விவசாய நிலத்தின் பட்டா ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

விவசாய நிலத்தின் பட்டா ரத்து, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

செங்கல்பட்டில் விவசாய நிலத்தின் பட்டாவை கேன்சல் செய்த அதிகாரியை கண்டித்து, விவசாயிகள் மற்றும் விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆலப்பாக்கம் ஊராட்சி, காளிநகர், திருக்கழுக்குன்றம், மேலேரிப்பாக்கம், நென்மேலி ஊராட்சிகளில் கிழவேடு கிராமங்களில் உள்ள நிலத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் 50 ஆண்டுக்கு மேலாக பயிர் செய்தும் மற்றும் குடியிருந்தும் வருகின்றனர்.

18 விவசாயிகளுக்கு 1972 ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டு பம்பு செட்டுக்கு இலவச மின்சாரம் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கடன் உள்ளிட்ட அரசு சலுகைகளை பெற்று வந்தனர்.

இந்த நிலங்களில் பயிரிட்டு அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு, குடும்ப செலவு, குழந்தைகள் கல்வி செலவு, மருத்துவ செலவு உள்ளிட்ட இதர செலவுகள் அனைத்தும் ஈடுகட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும், வழங்கப்பட்டுள்ள நிலப்பட்டாவை காரணமின்றியும், முன்னறிவிப்பு செய்யாமலும் ரத்து செய்துள்ளதாக தெரிய வருகிறது.

முன்னறிவிப்பு செய்யாமல் நிலம் மற்றும் குடியிருப்பு பட்டாவை ரத்து செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலம் மற்றும் வீடுகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரியவருகிறது. அரசு தன் தேவைக்காக நிலம் எடுப்பதற்காக மேலும் சில இடங்களை தேர்வு செய்துள்ளது.

செங்கல்பட்டு வட்டம், பொருந்தவாக்கம் இடமும் பார்க்கப்பட்டுள்ளது. மாற்று இடத்தை தீர்மானித்திட தமிழக அரசும் , மாவட்ட நிர்வாகமும் பரிசீலிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் டி.கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் இ.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் ஜி.மோகனன், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலளாா் பி.சண்முகம், சிஐடியு மாவட்ட செயலாளா் க.பகத்சிங்தாஸ், சிபிஎம் பகுதி செயலாளா் கே.வேலன், பகுதிக்குழு உறுப்பனிர் எம்.ரவி உள்ளிட்ட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளா் பி.துளசி நாராயணன் பேசினர். முன்னதாக சங்கத்தின் நிர்வாகிள் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.

Updated On: 13 Sep 2021 6:51 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  4. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  6. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  7. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  8. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  9. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!