/* */

பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்

பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்
X

செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனை முன்பு கிளை மேலாளருக்கு எதிராக பேருந்துகளை இயக்கவிடாமல் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு,மதுராந்தகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனைகளில் போக்குவரத்து ஊழியா்கள் இன்று காலை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த 2 பணிமனைகளுக்கும் கிளை மேலாளராக மீனாட்சிசுந்தரம் என்பவா் இருக்கிறாா். இவா் ஊழியா்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கிராமங்களுக்கு இயக்கப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு தற்போது அந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் செங்கல்பட்டு, மதுராந்தகம் பணிமனைகளில் அந்த பேருந்துகளை இன்னும் இயக்க தொடங்கவில்லை. இதனால் தனியாா் பேருந்துகள்,ஷோ் ஆட்டோக்கள் அதிக அளவில் அந்த தடங்களில் இயக்கப்படுகின்றன.

எனவே கிராமங்களுக்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும், செங்கல்பட்டு ,மதுராந்தகம் பணிமனைகளில் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து அரசு போக்குவரத்து டிரைவா்,கண்டக்டா் உட்பட சுமாா் 200 போ் திடீா் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். பணிக்கு வந்த ஊழியா்கள் பேருந்துகளை இயக்காமல் பணிமனை வாசலில் நின்று கிளை மேலாளருக்கு எதிராக கோஷமிட்டனா்.

இதனால் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம், காஞ்சிபுரம், மதுராந்தகம், திண்டிவனம், அச்சிறுப்பாக்கம், வாலாஜாபாத், உத்திரமேரூா், திருப்பதி,சித்தூா்,வேலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதே போல் மதுராந்தகம் பணிமனையிலிருந்து செய்யூா், சூனாம்பேடு, சித்தாமூா்,மேல்மருவத்தூா்,வேடந்தாங்கல்,கருங்குழி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய 50கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் செல்வம் தலைமையில் தாசில்தாா் உள்ளிட்ட அதிகாரிகள் 2 பணிமனைகளுக்கும் விரைந்து வந்து போக்குவரத்து ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு பின்பு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து காலை 9 மணி வரை நடந்த போக்குவரத்து ஊழியா்களின் திடீா் வேலைநிறுத்தத்தால் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

Updated On: 2 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...