/* */

தா.பழூர் அருகே காயங்களுடன் கிடந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காயம்பட்டு கிடந்த தேசியப்பறவை மயில் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பக்கப்பட்டது.

HIGHLIGHTS

தா.பழூர் அருகே காயங்களுடன் கிடந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு
X

தா. பழூர் அருகே காயம்பட்ட மயில் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள விக்கிரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமுருகன்(27) என்பவர் இரட்டை குளம் அருகே உள்ள தனது வயல் வெளியை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவரது வயலின் அருகே 3 வயதுள்ள ஆண் மயில் ஒன்று உடலில் காயங்களுடன் கிடந்துள்ளது. மயிலை மீட்டு விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றனர். பின்பு அரியலூரில் இருந்து வனத்துறை அதிகாரி வடிவேல் வரவழைக்கப்பட்டு அவரிடம் மயில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. பின்பு அவர் மயிலுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு நலமான பின்பு காட்டில் விடுவதாக கூறி எடுத்துச் சென்றார்.

கடந்த வாரம் இதேபோல் அப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கிடந்த மயிலை மீட்டு அப்பகுதி இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 2 Jan 2022 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...