/* */

சொத்துவரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ஜெயங்கொண்டம் நகர்மன்ற கூட்டத்தில் சொத்துவரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

HIGHLIGHTS

சொத்துவரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
X

ஜெயங்கொண்டம் நகர்மன்ற கூட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்து வரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரி தொடர்பான நகர்மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கருணாநிதி நகராட்சி பொறியாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை உதவியாளர் ஷகிலா பானு வாசித்தார்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள சொத்துவரி தொடர்பான தீர்மானம் அறிக்கை வாசித்த போது, அப்போது அதிமுக கவுன்சிலர் செல்வராஜ் குறுக்கிட்டு சொத்து வரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் சேகர், பாண்டியன், சுப்பிரமணியன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் இருந்த உறுப்பினர்களை கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 9 April 2022 5:56 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்