/* */

நாளை பட்டா சிறு கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள்

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்கள் பட்டா, சிறுகணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்களின் விவரங்களை கலெக்டர் அறிவித்தார்.

HIGHLIGHTS

நாளை  பட்டா சிறு கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமங்கள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் 24.11.2021 (புதன் கிழமை) அன்று நடக்கவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

வட்டம் வாரியாக 24.11.2021 அன்று (புதன் கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம்:

அரியலூர் வட்டத்தில அமீனாபாத் மற்றும் அரியலூர் (வ) ஆகிய கிராமங்களுக்கு அரியலூர் (வ) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், சின்னப்பட்டாக்காடு மற்றும் கோவிலூர் கிராமங்களுக்கு கோவிலூர் கிராம சேவை மைய கட்டிடத்திலும்,

செந்துறை வட்டத்தில் பொன்பரப்பி மற்றும் சிறுகளத்தூர் கிராமங்களுக்கு பொன்பரப்பி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்,

உடையார்பாளையம் வட்டத்தில் உடையவர்தீயனூர் மற்றும் கடம்பூர் ஆகிய கிராமங்களுக்கு உடையவர்தீயனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், எரவாங்குடி மற்றும் தண்டலை ஆகிய கிராமங்களுக்கு தண்டலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்,

ஆண்டிமடம் வட்டத்தில் விளந்தை (வ) மற்றும் விளந்தை (தெ) ஆகிய கிராமங்களுக்கு விளந்தை (தெ) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் முகாம் நடக்கவுள்ளது.

மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொது மக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Nov 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை