/* */

மரம் வெட்டியதை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

மரங்கள் வெட்டுவதை தடுக்கத்தவறிய அமீனாபாத் கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மரம் வெட்டியதை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
X

கோப்பு படம் 

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 23.12.2021 அன்று, அமீனாபாத் கிராமம், ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள 2 பூவரசம், 1 வேப்பமரம், 2 வாதநார மரம் ஆகிய 5 மரங்களை உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக வெட்டியதாக, அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் மதியழகன் மற்றும் செல்வராஜ் மனைவி சகுந்தலா ஆகியோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரங்கள் வெட்டுவதை தடுக்கத்தவறிய அமீனாபாத் கிராம நிர்வாக அலுவலர், அரியலூர் வருவாய் கோட்டாட்சியரால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தடுக்கத்தவறிய சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோன்று கடந்த மாதம் அரியலூர் வட்டம், காவனூர் கிராமத்தில் உரிய அனுமதியின்றி மரம் வெட்டியதை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!