/* */

கொள்ளிடம் ஆறு கரையோர பகுதிகளில் நின்று, 'செல்பி' எடுக்க தடை

அரியலூர் மாவட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

HIGHLIGHTS

கொள்ளிடம் ஆறு கரையோர பகுதிகளில் நின்று, செல்பி எடுக்க தடை
X

கொள்ளிடம் ஆறு.

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால், அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்துவிடப்படும் என்பதால், அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 60,000 கனஅடி வரை திறந்துவிடப்பட உள்ளது. திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு எந்நேரத்திலும் அதிகரிக்கப்படலாம்.

இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் இன்று (13.10.2022) நண்பகல் நிலவரப்படி 13,200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரால், கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகளவு இருக்கும். எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும், கரையோர கிராமங்களில் உள்ள வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் 'செல்பி" (selfie) எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல், பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு, விடுவதை தவிர்க்கவும் நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் விடுத்துள்ள மற்றொரு செய்தி குறிப்பு

உணவு பாதுகாப்புத்துறை உரிமம் :

வரும் தீபாவளி பண்டிகை காலத்தில், இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில், தயாரித்து பாதுகாப்பான இனிப்பு, பாலகார பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ, உபயோகிக்ககூடாது, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது. பண்டிகை காலத்தில் மட்டும் இனிப்பு பலகாரம் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

உணவு பாதுகாப்பு பயிற்சி :

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருட்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம், காலாவதியாகும் காலம் சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் உணவு தயாரிப்பாளர்கள், உணவு பாதுகாப்பு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் .

எனவே, நுகர்வோர் உணவு பொருட்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் விபரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் உணவு பொருட்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் ஆப் 9444042322 எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Oct 2022 9:20 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!