/* */

மக்களைத்தேடிமருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட 1,60,135 மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மக்களைத்தேடிமருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்
X

அரியலூர் மாவட்டம், வெங்கடகிருஸ்ணாபுரம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டடத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், வெங்கடகிருஸ்ணாபுரம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டமானது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவ வசதி தேவைப்படும் நபர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் மனுநீதி நாள் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தின் மூலமாக கிராம மக்களின் கோரிக்கைகள் விரைவாக தீர்க்கப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளும் உரிய காலத்திற்குள் சென்று சேர்ந்தது.

அத்திட்டத்தினை போலவே வருமுன் காப்போம் திட்டத்தின் வாயிலாக மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களின் வசதிகளுக்காக கிராம அளவில் மருத்துவ வசதி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தினை மேலும் முன்னெடுத்து செல்லும் வகையில், மருத்துவ வசதி தேவைப்படும் பொதுமக்களின் வீடுகளுக்கே செல்லும் மருத்துவம் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் மூலமாக மருத்துவப்பணியாளர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று ரத்தகொதிப்பு, சர்க்கரை அளவு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.

இப்புரட்சிகரமான திட்டமானது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர்களின் இல்லங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டு, நோயாளிகளுக்கு தேவைப்படும் பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில், அரியலூர் மாவட்டம், கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட 17 துணை சுகாதார நிலையத்திலும் இத்திட்டம் செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் , 1,60,135 மக்கள் தொகை கொண்ட கடுகூர் வட்டாரத்தில் வெங்கடகிருஸ்ணாபுரம் கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில், கடுகூர் வட்டாரத்தில் 5136 நோயாளிகளில், ரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்ட 2077 நோயாளிகளுக்கும், 2335 சர்க்கரை நோயாளிகளுக்கும், 724 இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மருந்து வழங்கப்பட உள்ளது.

மேலும்,அரியலூர் மாவட்டத்தில் நோய்த் தடுப்பு சிகிச்சை மற்றும் பிசியோ தெரபிஸ்ட் மூலம் (கை கால் அசைவு) 70 நபர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மேலம், வெங்கட கிருஸ்ணாபுரம் கிராமத்தில் 713 மக்கள் தொகையில் 13 நபர்களுக்கு தொற்றா நோய்க்கான மருந்து மற்றும் 4 நபர்களுக்கு பிசியோ தெரபிஸ்ட் மூலம் (கை கால் அசைவு) சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடுகூர் வட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பணி நாட்களில் (செவ்வாய் கிழமை தவிர) பெண் களப்பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்குகீழ் உள்ள உடல் குன்றிய நோயாளிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு வீட்டிலே செய்யக் கூடிய பெரிடோனியல் டையாலிஸிஸ் சேவையை மருத்துவ கல்லூரி டையாலிஸிஸ் பிரிவுடன் சேர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதுடன் சொல்லாத மக்களின் நலனுக்கு தேவைப்படும் இதுபோன்ற திட்டங்களையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். இச்சேவையினை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

பின்னர், பிசியோ தெரபி சிகிச்சைக்கு தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வாகனத்தினை கொடியசைத்து தொடக்கி வைத்து, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அவர்களுக்கு தேவையான மருந்துபொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ,அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஸ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வீ.சி.ஹேமசந்த்காந்தி, கோட்டாட்சியர் ஏழுமலை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சந்திரலேகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Updated On: 5 Aug 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  3. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  5. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  6. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  7. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  8. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  9. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  10. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...