/* */

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை: அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை: அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-2022ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியர்கள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை - ரூ.1000/-6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை - ரூ.3000/-.9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை - ரூ.4000/-.தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு - ரூ.4000/-இளங்கலை பட்ட படிப்பிற்கு - ரூ.6000/-முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு - ரூ.7000/- வழங்கப்படுகிறது.

மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு - 9 முதல் 12ஆம் வகுப்பு,தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3000/- மற்றும் இளங்கலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.5000/- மற்றும் முதகலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.7000/- வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2021-2022 அம் நிதியாண்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள் / தனியார் பள்ளிகள், அரசு / அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மாணவ மாணவியர் பிறத்துறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலமையாசிரியர் / கல்லூரி முதல்வரால் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

2021-2022ஆம் நிதியாண்டிற்கு இம்மாவட்டத்தில் பயிலும் தகுதியான மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 17, தரைத்தளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில்; மேற்காணும் சான்றுகளுடன் வங்கி கணக்கு புத்தக நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 29 Sep 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!