/* */

அரியலூரில் மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை

வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைப்பதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.

HIGHLIGHTS

அரியலூரில் மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை
X

கலெக்டர் ரமண சரஸ்வதி.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:

அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுபடி பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின் கீழ் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த ஊரடங்கு 09.08.2021 இன்று காலை 6.00 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 09.08.2021 முதல் 23.08.2021 காலை 6.00 மணி வரை நீட்டிப்பு செய்து உத்திரவிடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 09.08.2021 முதல் 23.08.2021 காலை 6 மணி வரை தடைவிதிக்கப்படுகிறது.

அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடைவிதிக்கப்படுகிறது. அக்கட்டுபாடுகளுடன் 23.08.2021 காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துகடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கடைகளின் நுழைவுவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைப்பதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களைஅனுமதிக்கக்கூடாது. கடைகளில் நுழைவுவாயில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்து செயல்படும் வணிக / இதர நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வரையறுக்கப்பட்ட நோய் கட்டுபாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை. பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களாக கூடுவதையும் தவிர்த்தல் வேண்டும். மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படமுடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கும் மாவட்ட நிருவாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிடவேண்டுமென அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.







Updated On: 9 Aug 2021 7:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...