/* */

அரியலூரில் இசைவு தீர்ப்பாயத்தின் என்ற பெயரில் மோசடி செய்தவர் கைது

அரியலூரில் இசைவு தீர்ப்பாயம் என்ற பெயரில் நீதிமன்றங்களுக்கு உண்டான அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று பொதுமக்களை ஏமாற்றியவர் கைது

HIGHLIGHTS

அரியலூரில் இசைவு தீர்ப்பாயத்தின் என்ற பெயரில் மோசடி செய்தவர் கைது
X

இசைவு தீர்ப்பாயம் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வந்த நபர் 

அரியலூர் மாவட்டம் பார்ப்பனச்சேரி கிராமம் நடுதெருவில் வசிக்கும் கண்ணன் மனைவி செல்வி என்பவர், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் அளித்த அப்புகாரில், தனக்கும் தன் சித்தப்பாவிற்கும் இடப்பிரச்சனை இருந்து வந்ததாகவும், கடந்த 06.04.2021 ஆம் தேதி தன் சித்தப்பா இறந்து விட்டார்.

இந்நிலையில் பார்ப்பனச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மரியசூசை வியாகுலம் என்பவர், வீட்டிற்கு வந்து தான் இசைவு தீர்ப்பாயத்தில் இருந்து வருவதாகவும், அது கோர்ட் மாதிரி, நான் தான் ஜட்ஜ். இந்த இடம் சம்மந்தமாக மாரியம்மாள் மனு கொடுத்துள்ளார். நான் தான் ஜட்ஜ். நான் கொடுப்பதுதான் தீர்ப்பு. நீங்கள் உங்கள் டாக்குமெண்டை கொடுங்கள் என்றும், நோட்டில் கையெழுத்து போடுங்கள் இல்லை வீட்டை காலி பண்ணு என்று மிரட்டினார். இசைவு தீர்ப்பாயம் என்ற பெயரில் ரூபாய் 100/- முத்திரைத்தாளில் தீர்ப்பு அளித்துவிட்டதாக, பல்வேறு சங்கதிகளை உள்ள தீர்ப்பு ஒன்றை அனுப்பியதாகவும், தனக்கு மரியசூசை வியாகுலம் யார் என்றே தெரியாது. சொத்து சம்பந்தமாக எந்த பிரச்சனையும் தீர்க்கக் கோரி அவரிடம் முறையிடவில்லை. மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி செல்வி புகார் கொடுத்தார்

இதன்பேரில் அரியலூர் மாவட்ட குற்ற பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், மரியசூசை வியாகுலம் என்பவர் இசைவு தீர்ப்பாயம் என்ற பெயரில், இது நீதிமன்றங்களுக்கு இணையானது என்றும், தனக்கு நீதிமன்றங்களுக்கு உண்டான அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று, பொது மக்களை ஏமாற்றியுள்ளார். ஆள்மாறாட்டம் செய்தும் பொய்யான ஆவணங்களை தயார் செய்தும், பணம் பெற்றுக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், மரியசூசை வியாகுலத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆவணங்களை கைப்பற்றி அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

Updated On: 11 Sep 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு