/* */

மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆய்வு

திருமானூர் ஒன்றியத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை, அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆய்வு
X

கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில்,  மழைநீரால் சூழப்பட்டுள்ள வயல்களை எம்எல்ஏ சின்னப்பா பார்வையிட்டார். 


அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக, சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள், தற்போது தண்ணீரால் சூழப்பட்டு படிப்படியாக வடியத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளான கீழகாவட்டாங்குறிச்சி, இலந்தைகூடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை எம்எல்ஏ சின்னப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தண்ணீர் வடிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவருடன் உடன் திருமானூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, மதிமுக ஒன்றிய செயலாளர்(மே) மாணிக்கவாசு, கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், பளிங்காநத்தம் ஒன்றியக்குழு உறுப்பினர் லெட்சுமி ரமேஷ்குமார், உதவி வேளாண்மை அலுவலர் முருகன், துணை வேளாண்மை அலுவலர் பால்ஜான்சன் உட்பட பலரும் உடனிருந்தனர்.

Updated On: 1 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்