/* */

அரியலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியத்துடன் கடனுதவி

Poultry Farm Loan By Government- அரியலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியத்துடன் கடனுதவி
X

கோழிப்பண்ணை பைல் படம்.

Poultry Farm Loan By Government- அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2022-23-ஆம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் "கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்" செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டுக் கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும் திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கி, திட்டத்தினை செயல்படுத்திட தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு, குஞ்சுபொறிப்பான்), 4 வார குஞ்சுகள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,66,875/- வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள், இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக் கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால், பயனாளியே கோழி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள இயலும்.

இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேலும், பயனாளி கோழிப்பண்ணையை தொடர்ந்து 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்திரவாதக் கடிதம் அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழிகளை 72 வாரங்கள் வளர்த்து 140 முட்டைகள் வீதம் வருடத்திற்கு 17500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும். இதில் சுமார் 2000 முட்டைகளை குஞ்சுபொறிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதம் உள்ள முட்டைகளையும் மற்றும் வளர்ந்த சேவல்களையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலமாக ஒரு வருடத்திற்கு ரூ.2.00 இலட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 15.08.2022-க்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்