/* */

பூத் ஸ்லிப் மட்டுமே போதுமான ஆவணம் அல்ல:அரியலூர் கலெக்டர்

11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்ய கலெக்டர் தகவல்

HIGHLIGHTS

பூத் ஸ்லிப் மட்டுமே போதுமான ஆவணம் அல்ல:அரியலூர் கலெக்டர்
X

வாக்காளர் தகவல் சீட்டு மட்டுமே போதுமான ஆவணம் அல்ல. 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் என கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் கலெக்டர் விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்டத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ன்போது வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்படவாக்காளர் சீட்டுக்கு (பூத் சிலிப்) பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தலைமை தேர்தல் அலுவலர் தெரிவிக்கப்பட்டதன்பேரில், நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படவுள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி விபரம், வாக்குபதிவு நாள், வாக்குபதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

வாக்குப்பதிவு தினத்திற்கு 5 நாட்களுக்கு முன்னர் வாக்காளர் தகவல் சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு விடும். சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் தகவல் சீட்டு மட்டுமே போதுமான ஆவணம் அல்ல.

எனவே, வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றான பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சலக மேலாளரால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட நேர்த்தி அட்டை, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் என அரியலூர் மாவட்ட வாக்காளர்களுக்கு கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.




Updated On: 25 March 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...