/* */

அரியலூர் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

அரியலூரில்  சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.




அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு 2 சாலைப்பணியாளர்கள் என இட ஒப்புதல் வழங்கி கிராமப் புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணி காலமாக முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும், பணிக் காலத்திலும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் பெ.காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Jan 2022 9:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  7. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?