/* */

அரியலூர்: ஐடிஐ மாணவர்களுக்கு இணையக்குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

அரியலூர் மாவட்டம், அரசினர் தொழிற்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர்: ஐடிஐ மாணவர்களுக்கு இணையக்குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
X

ஐடிஐ மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

திருச்சி மண்டல காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின் படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் அறிவுரைப்படி, இன்று அரியலூர் மாவட்டம், அரசினர் தொழிற்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஞா.செங்குட்டுவன் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் க.சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டு இணையக்குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது என்றும், இணையக் குற்றங்களில் இருந்து எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பது குறித்தும், மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது பற்றியும், வங்கி மோசடி குறித்து 14440-க்கு எவ்வாறு புகார் அளிப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்தனர். இதில் சுமார் 200 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Updated On: 30 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை