/* */

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் கலந்தாய்வு

அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 8ம்தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

HIGHLIGHTS

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஆகஸ்ட்  8-ம் தேதி முதல் கலந்தாய்வு
X

அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பைல் படம்.

தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூன்) 22ம் தேதி முதல் தொடங்கியது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த மாதம் 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது. மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவானது.

இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் மாதம் 8ம்தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8ம்தேதி சிறப்பு ஒதிக்கீட்டில் உள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வும், 10ம்தேதி வணிகவியல் மற்றும் தமிழ் பாடத்திட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வும், 11ம்தேதி அறிவியல் பாடத்திற்கு கலந்தாய்வும், 12ம்தேதி வரலாறு, பொருளியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வும் நடத்தப்படுகிறது.

கலந்தாய்விற்கு வருகைதரும் மாணவர்கள் இணையதள விண்ணப்பத்தின் அசல், மாற்றுச்சான்று அசல் மற்றும் 5 நகல்கள், 11ம்வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் 5 நகல்கள், சாதிச்சான்றிதழ் அசல் மற்றும் 5 நகல்கள், ஆதார் சான்றிதழ் அசல் மற்றும் 5 நகல்கள், மாணவர்களின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்குப்புத்தக முதல் பக்கம் 5நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5 ஆகிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும்.

மேலும் கல்லூரி சேர்க்கை கட்டணமாக பி.ஏ ரூ.3195, பி.எஸ்.சி ரூ 3215, பி.எஸ்.சி கணினி அறிவியல் கட்டணம் ரூ. 2615, பி.காம் ரூ.3195 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 Aug 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  3. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  5. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  6. ஈரோடு
    மொடக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு
  7. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!