/* */

சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்டுணரும் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட், அரசாணை எண்.344, அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கல்லங்குறிச்சி, அமீனாபாத் மற்றும் கயர்லாபாத் கிராமத்தில், சுண்ணாம்புக்கல் சுரங்கம் 240.61 ஹெக்டேர் விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளது.

இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டம் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் கயர்லாபாத் கிராமம் அரியலூர் சிமெண்ட் ஆலை வளாகம் சமுதாயக் கூடத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் 05.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் பொது மக்கள் தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெறலாம். மேலும் பொது மக்கள் தங்களின் கருத்துக்களை கூறலாம். அவை பதிவு செய்யப்பட்டு புதுதில்லி, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 3 May 2022 9:34 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...