/* */

அரியலூரில் அமைச்சர் தலைமையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூரில் அமைச்சர் தலைமையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
X
சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம், செந்துறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் போக்குவரத்துத்துறை சா.சி.சிவசங்கர் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 11 வகையான சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்களை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:-

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளாக பிறக்கவும், அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி சரி சமமாக வளைகாப்பு நடத்தும் வகையில் இன்றைய தினம் செந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட ஐந்து வகையான கலவை சாதங்களும், சேலை, சில்வர் தட்டு, வளையல், குங்குமம், கண்ணாடி, தேங்காய் உள்ளிட்ட 11 வகையான சீர்வரிசைப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

கருணாநிதி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இதன்படி, 1928-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் கோரிக்கையான பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற கோரிக்கையினை 1989-ஆம் ஆண்டு கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தபொழுது இந்தியாவில் முதல் முறையாக நிறைவேற்றினார். இதேபோன்று பெண்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில் 8-ஆம் வகுப்பு படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதேபோன்று 1996-ஆம் ஆண்டில் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபொழுது 10-ஆம் வகுப்பு வரை பெண்கள் படித்து இருந்தால் அவர்களின் திருமணத்திற்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தினார்கள். அந்த வகையில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் கல்லூரியில் படிக்கும் பொழுது மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற சிறப்பானத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். பெண்களின் முன்னேற்றமே குடும்பத்தின் முன்னேற்றம். குடும்பத்தின் முன்னேற்றம் சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு இதுபோன்றத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக அனைத்துத்தரப்பு பெண்களும் மிகுந்த பயன்பெறுவதுடன், அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியாக உள்ளது.

மேலும், இச்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி சத்தான உணவுகளை சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதுடன் கல்வியே அழியாத செல்வம் என்பதை உணர்ந்து தங்களது குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்க வைத்து, சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சார்பில் 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சேலை அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, செந்துறை வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் மகாயத்ரி, செந்துறை ஊராட்சி மன்றத்தலைவர் செல்லம் கடம்பன் மற்றும் அரசு அலுவலர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Oct 2022 10:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  3. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  4. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்