/* */

அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழுகூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
X

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழுகூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.


அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முந்தைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கலெக்டர் ரமணசரஸ்வதி தமிழக முதல்வர் அறிவித்த கொரோனா பெருந்தொற்றினால் ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.300000 மற்றும் இரட்டை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.500000 மற்றும் மாதந்தோறும் பராமரிப்பு நிதி ரூ.3000 பெறுவது தொடர்பாக கூராய்வு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதியில் குழந்தை திருமணம் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளர், காணாமல் போன குழந்தைகள் பெண் கல்வி மேம்பாடு குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும் எனவும்,

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு நிவாரண உதவித்தொகை பெற்று வழங்க வேண்டும் எனவும்,குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும்,

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும் இடங்களில் சென்று விழிப்புணர்வு வழங்க வேண்டும் எனவும்,நகராட்சி அளவில், வட்டார அளவில், பேரூராட்சி அளவில் மற்றும் கிராம அளவிலும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்பட்டு, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அப்பகுதிகளில் குழந்தைகளுக்கெதிரான பிரச்சனைகள் இருப்பின் உடனடியாக களையப்பட தொடர்புடைய துறைகளோடு இணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் வறுமையான சூழ்நிலையில் உள்ள மாணவிக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பு நீதிபதி அழகேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரசேகர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ச.துரைமுருகன், குழந்தைகள் நலக்குழு தலைவர் வ. துரைராசன் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள், நன்னடத்தை அலுவலர் புஷ்பராஜா, சுகாதாரத்துறை, சைல்டு லைன் 1098 மற்றும் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Oct 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...