/* */

13 ஆயிரத்து 300 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி

தற்காலிக அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பபடும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

13 ஆயிரத்து 300 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி
X
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. 

புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் 6ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா இன்று முதல் ஜுலை 04-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றன. விழாவில் 80 அரங்குகளும், லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

புத்தகத்திருவிழாவினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பள்ளி வளர்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு முக்கியமாக உள்ளது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஊராட்சி மன்ற தலைவருக்கு உரிய பயிற்சிகளும் வழங்கப்படும். தற்காலிகமாக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 13 ஆயிரத்து 300 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.

மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக பணியிடங்கள் நிரப்பபடும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு காலதாமதமாகும் என்பதால் தற்காலிக அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்கள் வரும் 1ஆம் தேதி முதல் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கும் என கூறினார்.

Updated On: 24 Jun 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  7. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?