/* */

அரியலூர் அருகே உருட்டுக் கட்டையால் ஒருவர் அடித்து கொலை, இரண்டு பேரை தேடுது போலீஸ்

அரியலூர் அருகே குடும்ப தகராறில் உருட்டுக் கட்டையால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே உருட்டுக் கட்டையால் ஒருவர்  அடித்து கொலை, இரண்டு பேரை தேடுது போலீஸ்
X
அரியலூர் அருகே குடும்பத்தகராறில்  உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சாமிநாதன்.

அரியலூர் மாவட்டம் சிறுவளூர் கிராமத்தில் பெண்கள் தகராறு குடும்ப சண்டையாக மாறி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிசார் வழக்குபதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய இரண்டுபேரை தேடிவருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் சிறுவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் பிரகதீஸ்வரியும், கோவிந்தராஜின் மனைவி சின்னபொண்ணும் உறவினர்கள். இவர்களுக்குள் இடத்தகராறு கடந்த ஐந்து வருடங்களாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சின்னபொண்ணு கருவேப்பிலை பறிக்க சென்ற போது பிரகதீஸ்வரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, இரு குடும்ப பெண்களும் ஜாடைமாடையாக பேசி சண்டை போட்டுள்ளனர்.

இது குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு தெரியவர சாமிநாதன் அருவாளை எடுத்துக்கொண்டு கோவிந்தராஜிடம் நியாயம் கேட்க சென்றுள்ளார். இது சண்டையாக மாறியதையடுத்து, கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் உருட்டுக்கட்டையால் சாமிநாதனை தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு சிகிச்சை அழைத்து சென்ற நிலையில் அங்கு உயிரிழந்தார்.

இதனையடுத்து அரியலூரில் சிகிச்சை பெற்றுவந்த கோவிந்தராஜ் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடிவருகின்றனர்.

Updated On: 1 Jun 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்