/* */

அரியலூர் மாவட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை அரியலூர் கலெக்டர் பாராட்டினார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு
X

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அரியலூர் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று வழங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலை நேர்மையாகவும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் தொடர்பான விபரங்களை உறுதி செய்வற்காகவும், ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை கண்டறிந்து நீக்கவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்டையில் இந்தியா முழுமையும் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இப்பணி தொடங்கப்பட்டதில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 01.08.2022 முதல் இப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி துவங்கப்பட்டதிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதாருடன் வாக்காளர் அட்டைகளை இணைக்கும் பணியினை மேற்கொண்டனர். இப்பணியில் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 5,18,546 பேரில் 3,78,340 வாக்காளர்கள் (72.96 சதவீதம்) இன்று வரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். இப்பணியில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இதற்காக அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இப்பணியினை சிறப்பாக மேற்கொண்டு முதலில் 100 சதவீதம் இலக்கினை எய்திய 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம் 20 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், 16 கிராம உதவியாளர்களும், 09 சத்துணவு அமைப்பாளர்களுக்கும் மற்றும் 24 அங்கன்னாடி பணியாளர்களுக்கும் என 69 வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் ஏனைய வாக்குசாவடி நிலை அலுவலர்களும் இப்பணியினை விரைந்து முடித்து 100 சதவீதம் இலக்கினை 31.10.2022-க்குள் பூர்த்தி செய்து நமது மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர்கள் கண்ணன் (அரியலூர்), .துரை (ஜெயங்கொண்டம்), கலிலூர்ரகுமான் (ஆண்டிமடம்), வேல்முருகன் (தேர்தல் பிரிவு) மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலத்துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 10 Oct 2022 9:12 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  3. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  7. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  10. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...