/* */

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் 4-ம்நாள் ஜமாபந்தி

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் 4-ம்நாள் ஜமாபந்தி நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் 4-ம்நாள் ஜமாபந்தி
X

அரியலூர் வட்டத்தில் நான்காம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர் வட்டத்திற்கான நான்காம் நாள் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (17.06.2022) நடைபெற்றது.

இதில், 1431-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் மூன்றாம் நாளில் கீழப்பழுவூர் உள்வட்டத்திற்குட்பட்ட கோவில் எசணை (மேற்கு), கோவில் எசணை (கிழக்கு), எலந்தக்கூடம், குலமாணிக்கம் (மேற்கு), குலமாணிக்கம் (கிழக்கு), கண்டிராதீர்த்தம், திருமழப்பாடி, அன்னிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம் உள்ளிட்ட 11 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 168 மனுக்கள் அவற்றில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு இவர்களுக்கு இன்றைய தினமே பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

மேலும், இம்மனுக்களை உரிய விசாரணை செய்து தீர்வுகாணவும், கிராம கணக்குகளை முறையாக பராமரிக்கவும், நிலஅளவை அலுவலர் பயன்படுத்தும் கருவிகளை பார்வையிட்டு, உரிய முறையில் பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

மேலும், அரியலூர் வட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், 21.06.2022 அன்று ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்குட்பட்ட விழுப்பணங்குறிச்சி, கீழகொளத்தூர், சின்னப்பட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழிகயமனவாளம், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் குமரையா, துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Jun 2022 12:38 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!