/* */

விவசாயிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

விவசாயிக்கு கொலை மிரட்டல்-  வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆடு திருடிய வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதியை சேர்ந்தவர் பக்ருதீன் (21). இவர் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி மீன்சுருட்டி அருகே வீரசோழபுரத்தில் விவசாயியை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, ஆடு திருடிய வழக்கில் மீன்சுருட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது அடிதடி வழக்கு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.

எனவே இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பக்ருதீனை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட எஸ்பி., சீனிவாசன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா குண்டர் சட்டத்தில் பக்ருதீனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பக்ருதீனிடம், ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழங்கினார்.

Updated On: 8 Feb 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு