/* */

கார்த்திகை தீபத்தன்று விளக்கை எந்த திசையில் ஏற்ற வேண்டும்?

கார்த்திகை தீபத்தன்று விளக்கை எந்த திசையில் ஏற்ற வேண்டும்? அப்படி ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

HIGHLIGHTS

கார்த்திகை தீபத்தன்று விளக்கை எந்த திசையில் ஏற்ற வேண்டும்?
X

கார்த்திகை தீபம் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். கார்த்திகை நட்சத்திரம் நிலவும் போது, கார்த்திகை பௌர்ணமி அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. வீடுகளிலும் கோயில்களிலும் மாலையில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றப்படுகிறது. இது உங்கள் வாழ்வில் உள்ள துன்பங்களை நீக்கி மகிழ்ச்சி என்னும் வெளிச்சத்தை கொடுக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வீடுகளில் தீபத்தை ஏற்றி கொண்டாடுவார்கள்.

கார்த்திகை பௌர்ணமி அன்று கார்த்திகை தீபம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு தொடங்கி நவம்பர் 20 ஆம் தேதி அதிகாலை 4:29 மணிக்கு முடிவடைகிறது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். கார்த்திகை தீபம் இந்த புராணத்தின்படி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

தீபம் ஏற்றும் முறை

தீபத் திருநாளில் வடக்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும். கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது என்று கூறுவார்கள். மேலும், தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்களாவது ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.

தீபம் ஏற்றுவதால் பெறும் நன்மைகள் கார்த்திகை திருநாளில் நீங்கள் தீபம் ஏற்றுவது உங்களுக்கு பல நன்மைகளை தருகிறது. துன்பம் என்ற இருளை நீக்கி மகிழ்ச்சி என்னும் தீபத்தை இந்நாளில் ஏறுங்கள். நீங்கள் நினைத்த செயல்கள் நடக்கும். திருமணம் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கும். வீட்டில் செல்வங்கள் பெருகும். சகல நன்மைகளை உண்டாகும். இந்த நல்ல நாளில் விளக்கை ஏற்றி இறைவனை வணங்கி வளம் பெறுங்கள்.

Updated On: 19 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  4. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  8. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  9. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு