குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!

kadaga rasi guru peyarchi-2022-23ம் ஆண்டுக்கு கடக்க ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது என்று பாப்போம் வாங்க.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!
X

kadaga rasi guru peyarchi-கடகம் ராசி.

2022-23ம் ஆண்டுக்கு கடக்க ராசிக்காரர்களுக்கான குரு பெயற்சி பலன்

kadaga rasi guru peyarchi-பெரும் நன்மைகளைச் செய்பவரும், மங்களங்களை அளிப்பவரும், கடக ராசிக்கு 6,9 ம் வீடுகளுக்கு அதிபதியாக விளங்குபவருமான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த 2022 ம் ஆண்டு, கும்பம் மற்றும் மீன ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

கடக ராசிக்காரர்களே..! ஏப்ரல் 12, 2022 வரை உங்கள் 8 ம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு, அதற்குப் பின்னர் உங்கள் 9 ம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆகிறார். கடக ராசிக்கு மிகவும் சாதகமாக இருப்பவரான குருவின் இந்தப் பெயர்ச்சி, வெகுமதிகள், செல்வம், வெளிநாட்டுப் பயணம்,அதிர்ஷ்டம் ஆகியவற்றை ஏப்ரல் 12க்குப் பிறகு உங்களுக்கு வழங்கக் கூடும். 2022 இல், கும்பம், மீனம் என இந்த இரு ராசிகளில் நடைபெறும் குருவின் சஞ்சாரம், செல்வம் ஈட்டவும், வேலை, கல்வி போன்றவற்றிற்காக வெளிநாடு செல்லவும் உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடும். அதிர்ஷ்டம் காத்திருப்பதால், உங்களுக்கு புதிய தொடர்புகளும், கடின உழைப்பின் மூலம் வெற்றியும் கிடைக்கக்கூடும். சிலர் இந்த ஆண்டு, தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்வார்கள். இவ்வாறு, இந்த 2022 இல், கடக ராசிக்கு நல்ல மகிழ்ச்சியை அனுபவிக்கும் வாய்ப்புள்ளது.

வேலை மற்றும் தொழில்

2022 இல் மிகச் சிறப்பாகப் பணியாற்றி, தொழில் அல்லது வேலையில் நல்ல நிலையை அடையக்கூடும். சிலருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வியாபாரம் மற்றும் சுய தொழில் செய்வோருக்கு வெற்றி, ஆதாயம், புகழ் கிடைக்கக்கூடும். பொழுதுபோக்கு, விளையாட்டில் வெற்றியும், புகழும் அளிக்கும். அதே நேரம், கணினி, மென்பொருள் தொடர்பான பணிகள் லாபம் தரக்கூடும். சமூக ஊடகத்துறையும், இந்த ஆண்டு, கடக ராசிக்கு வெற்றி, புகழ், செல்வம் அளிக்கக்கூடும். படைப்பு மற்றும் கலைத் துறைகளில், 2022ன் பாதிக்குப் பின் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு, வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு மூலம் அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கவும் கூடும்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் உண்டாக குரு பூஜை செய்வது சிறப்பு.

காதலும்,உறவும்

திருமண வயதில் உள்ளவர்களுக்கு சிலர் காதல் வயப்படலாம். அதுவும் அவர்கள் விரும்பியபடி மனைவி அமையும் வாய்ப்புள்ளது. உங்கள் உள்ளம் கவர்ந்தவருடன், பல இனிமையான, சுகமான காலங்களை அனுபவிக்கக்கூடும். தொலைதுரத் தொடர்புகளில் உள்ளவர்களை நேரில் சந்தித்து, மகிழும் வாய்ப்பும் சிலருக்கு உள்ளது. விருப்பமானவர்களுடன் சிலருக்கு, இந்த ஆண்டு திருமணமும் நடைபெறலாம். காதல் திருமணங்கள் மகிழ்ச்சியும், வளமும் அளிக்கக்கூடும். ஆனால், கும்ப ராசியில் குரு பெயர்ச்சி, காதல் உறவுகளில் சிறுசங்கடங்களை உருவாக்கலாம்; எனினும் ஏப்ரல் 12 க்கு பின் நிகழும் மீனராசியில் குரு பெயர்ச்சி, மகிழ்ச்சி தரக் கூடும். தவிர, இந்த 2022 இல், பெற்றோர்,உடன் பிறந்தோர், குடும்பத்தினர் உறவு சுமுகமாகவும், இனிமையாகவும் நீடிக்கும்.

கணவன்-மனைவிக்கு இடையே நல்லுறவு நிலவ பால திரிபுர சுந்தரி பூஜை செய்வது சிறப்பு

திருமண வாழ்க்கை

kadaga rasi guru peyarchi-கடக ராசிக்கு மணவாழ்க்கை வளமும், சந்தோஷமும் நிறைந்து காணப்படும். பிரிந்து போன கணவன் மனைவி இடையே சமாதானம் ஏற்பட்டு, ஒரு புதிய நெருக்கத்துடன் வாழ்க்கை அமையும். அன்பு, நம்பிக்கை, புரிந்துணர்வு, பரஸ்பர ஒற்றுமையுடன் புதிய வாழ்க்கையை தொடரலாம். கணவன் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் அன்புடனும்,ஆதரவுடனும் நடந்து கொள்ளலாம். கும்ப ராசியில் குரு சஞ்சாரம் செய்யும்போது மணவாழ்க்கையில் சில பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மீனத்தில் அவர் பெயர்ச்சி ஆவதால் மண வாழ்க்கையில் மீண்டும் காதல் மலரும் சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.

குடும்ப உறவுகளில் நல்லுறவு நீடிக்க துர்கா பூஜை செய்வது சிறப்பு

நிதிநிலை எப்படி இருக்கும்

விவசாயம், சொத்து வாங்குதல், விற்பனை செய்தல், எற்றுமதி,இறக்குமதி, பருத்தி, ஜவுளி, போக்குவரத்து போன்ற தொழில்கள் நன்றாக நடக்கலாம். பல்பொருள் அங்காடி அல்லது வணிக வளாகத்தில் கடையும் சிறப்பாகச் செயல்படலாம்.ஓட்டல், உணவு விடுதி, பயணம் தொடர்பான தொழில்களும் நல்ல லாபம் ஈட்டலாம். எனவே, இந்த ஆண்டு முழுவதும் பணவரவு தாராளமாக இருக்கும். பணப் புழக்கமும், செல்வச் செழிப்பும் நிறைந்து, உங்களுக்கு இது, ஒரு வளமான ஆண்டாகத் திகழும் வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகம் இருந்தாலும், அதிகப் பணத்தை சேமிக்கவும் செய்யலாம்.

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை செய்வது சிறப்பு

கல்வி

உயர்கல்வி கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்கலாம். வெளிநாட்டில் பயில்வதற்கும் வாய்ப்பு கிடைக்கலாம். இந்த ஆண்டு, பல கடக ராசி மாணவர்கள்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. சிலருக்குக் கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றில் நல்ல வேலைவாய்ப்பும், வேறு சிலருக்கு உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு மூலம் நல்ல வேலையும் கிடைக்கக்கூடும். சிலர் பள்ளியில் சிறப்புடன் பயின்று, புகழ் அடையக்கூடும். தேர்வுகளிலும் அதிர்ஷ்டம் உங்களுக்குத் துணை புரியலாம். எனவே, கல்வியில் நல்ல வெற்றி கிடைக்கக்கூடும்.

கல்வியில் வெற்றி கிடைக்க கேது பூஜை செய்வது சிறப்பு

உடல் ஆரோக்கியம்

கடக ராசிகாரர்கள், இந்த ஆண்டு முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் எவ்வித குறையும் ஏற்படாது. நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் எனலாம். எனினும் சிலருக்கு, முட்டி, எலும்பு, கால் போன்றவற்றில் வலி தோன்றலாம். அது கூட விரைவில் குணமாகி விடக்கூடும். நீண்ட நாள் நோய்களிலிருந்து கூட இப்பொழுது குணமடைய வாய்ப்புகளும் உள்ளன. தவிர, சிலர் தடகள விளையாட்டு போன்றவற்றில் வெற்றியடையக் கூடும்.

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை செய்வது சிறப்பு

சில முக்கிய குறிப்புகள்

kadaga rasi guru peyarchi-திங்கட்கிழமைகளில் வெள்ளை ஆடை அணிந்து, வாசனைப் பொருட்கள் பூசிக்கொள்ளவும்

திங்கட்கிழமைகளில் எழைகளுக்கு அரிசி, பருப்பு, பயிறு வகைகள், பால் போன்றவை தானம் செய்யவும்

வியாழக்கிழமைகளில் விஷ்ணு அல்லது சிவ ஆலயங்களுக்குச் சென்று ஆரத்தி வழிபாடு செய்யவும்

ஹனுமான் சாலிஸா பக்திப் பாடலை தினமும் பாராயணம் செய்யவும்

திங்கட்கிழமைகளில் சிலலிங்கத்திற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து, தினமும் 'ஓம்' மந்திரம் ஓதவும்

வெள்ளி மோதரம் அணியவும் அல்லது வெள்ளிக் குடுவையிலிருந்து நீர் அருந்தவும்.

Updated On: 13 Aug 2022 5:40 AM GMT

Related News

Latest News

 1. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 2. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 3. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 4. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 5. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 7. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 8. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 9. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 10. சினிமா
  அல்லு ஸ்டூடியோஸ் - 'ராமலிங்கையாகாரு'க்கான கௌரவம்..!