/* */

சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

HIGHLIGHTS

சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
X

சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையிலும், காத்திருப்பு மண்டபத்திலும் சுமார் 2.மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சிறுவாபுரி முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு எனும் ஊரில் அமைந்துள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவில் ஓர் புகழ்பெற்ற முருகன் திருத்தலம் ஆகும். ஐந்து நிலை ராஜகோபுரம், 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை, அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ் பாடல்கள், பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோவில் தமிழ்நாட்டில் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.


கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம், மூன்று நிலை கொண்ட மண்டபம், மூலவர் சன்னதி, விநாயகர், வள்ளி, தெய்வானை சன்னதிகள், நவகிரக சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி போன்றவை இக்கோவிலின் அமைப்பில் அடங்கும். மூலவர் பாலசுப்பிரமணியசாமி, வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்.

சிறப்புகள்

அருணகிரிநாதரின் திருப்புகழ்: சிறுவாபுரி முருகனைப் போற்றி அருணகிரிநாதர் பாடிய 10 திருப்புகழ் பாடல்கள் இக்கோவிலில் பாடப்படுகின்றன.

பஞ்ச மூர்த்திகள்: பாலசுப்பிரமணியர், விநாயகர், லிங்கம், சண்டிகேஸ்வரர், வள்ளி-தெய்வானை ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கக்கூடிய சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.

மயில் வாகனம்: சிறுவாபுரி முருகன் மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது இக்கோவிலின் தனித்துவம்.

தீர்த்தங்கள்: சிறுவாபுரி கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், வாயு தீர்த்தம், மற்றும் பிரம்ம தீர்த்தம்.

விழாக்கள்: தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, திருக்கார்த்திகை போன்ற விழாக்கள் இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பக்தர்கள்:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருகின்றனர். குழந்தை வரம், திருமண வரம், வேலை வாய்ப்பு, நோய் நிவாரணம் போன்ற வேண்டுதல்களுடன் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.


இக்கோவிலில் தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், கட்டண தரிசனம்₹.100, என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டியில் கட்டி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சென்றனர்.


இது தொடர்பாக பக்தர்கள் தெரிவிக்கையில் இத்தகைய பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அடிப்படை வசதிகளை சரிவர இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமப்படுவதாகவும், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூர அளவில் நின்று தரிசனம் செய்து வருவதாகவும், கோடை காலம் நெருங்கி விடுவதால் எனவே கூடுதல் மண்டபம் அமைக்க வேண்டும் எனவும்,ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்காக ஆங்காங்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

Updated On: 20 Feb 2024 10:54 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!