/* */

சிவபெருமான் பார்வதியை கரம்பிடிக்க சதுரங்கம் (Chess) விளையாடினாரா?

Sathuranga Vallabanathar Temple-பார்வதியின் அவதாரத்தைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை சதுரங்கம் விளையாடி பெற்றதால் சிவபெருமான் சதுரங்க வல்லபநாதர் என்று அழைக்கப்பட்டார்

HIGHLIGHTS

சிவபெருமான் பார்வதியை கரம்பிடிக்க சதுரங்கம் (Chess) விளையாடினாரா?
X

Chess Olympiad : Sathutanga vallaba nathar temple - சிவபெருமான் பார்வதியை கரம்பிடிக்க சதுரங்கம் (Chess) விளையாடினாரா?

Sathuranga Vallabanathar Temple-உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ள நிலையில், சிவபெருமான் பார்வதியின் அவதாரத்தை கரம் பிடிக்க சதுரங்கம் (Chess) விளையாடியதாக கூறப்படும் நிகழ்வு, சமூகவலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சதுரங்கம் விளையாட்டுடன் தொடர்புடைய கோவில் குறித்தும், அங்கு மூலவராக விளங்கும் சதுரங்க வல்லபநாதர் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள திருப்பூவனூரில் உள்ள பழமையான சிவன் கோயில் சதுரங்கம் விளையாட்டுடன் தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலின் முதன்மைக் கடவுள் சதுரங்க வல்லபநாதர், சதுரங்கத்தில் வல்லுனர் என்று அழைக்கப்படுகிறார். பார்வதியின் அவதாரத்தைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை சதுரங்கம் விளையாடி பெற்றதால் சிவபெருமான் சதுரங்க வல்லபநாதர் என்று அழைக்கப்பட்டார் என்று புராணத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'1,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சதுரங்கம் விளையாட்டு விளையாடப்பட்டதாக கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதால், கோவிலின் பாரம்பரியம் மற்றும் விளையாட்டுடன் தமிழகத்தின் வரலாற்று தொடர்பை முன்னிலைப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்து உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை ஒட்டி, சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கும் நேப்பியர் பாலம், சதுரங்க மேடை போல் வர்ணம் அடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 March 2024 10:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்