உதய்பூர் சிந்தனை முகாம் காங்கிரஸ் கட்சிக்கு பலனளிக்குமா?

தேர்தல்களில் தோற்கும்போதெல்லாம் குழுக்கள் அமைக்கும் காங்கிரஸ், இதுவரை அமைத்த குழுக்களின் அறிக்கைகளை பரிசீலித்ததா?

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உதய்பூர் சிந்தனை முகாம் காங்கிரஸ் கட்சிக்கு பலனளிக்குமா?
X

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் 

2024 லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சி இழந்த வாக்காளர்களை திரும்பப் பெறுவதற்கும், மறுமலர்ச்சிக்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானின் உதய்பூருக்குச் செல்கிறது. இதில், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் மற்றும் அடுத்தடுத்து வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இங்கு தான் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று உள்ளது.

1996 மற்றும் 2004க்கு இடையில், காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது, அக்கட்சி இரண்டு சிந்தனை முகாம்களை நடத்தியது. அவை 1998ல் பச்மாரி மற்றும் 2003ல் சிம்லாவில் நடந்தது. இதில் ஒரு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு மற்றும் இரண்டு சிறப்பு அமர்வுகள் நடந்தன. 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தபோதும், கட்சி ஐந்து மாநாடுகளை நடத்தியது.


காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் கடினமான கால கட்டமான கடந்த எட்டு ஆண்டுகளில், கட்சி ஒரே ஒரு தேசிய மாநாட்டை 2018ல் மட்டுமே நடத்தியுள்ளது. காங்கிரஸின் கட்சி மாநாடு குறித்த கட்சி விதிகள், "காங்கிரஸின் மாநாடு பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, காரியக் கமிட்டி அல்லது ஏஐசிசியால் தீர்மானிக்கப்படும் நேரம் மற்றும் இடத்தில் நடைபெறும்" என்று கூறுகிறது.

ஒவ்வொரு தேர்தலாக கட்சி தோல்வியடைந்து வருவதால், கூட்டுச் சிந்தனை, வியூகம் உருவாக்குதல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல், வாக்காளர்களின் மனதில் இடம் பிடிக்க தேவையான யோசனையையோ அல்லது வழிமுறைகளையோ முன்வைக்க முடியவில்லை என்பதால் குழப்பமடைகிறது.

2007ம் ஆண்டில், கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி முடிவு செய்த நிலையில், அவர் பொதுச் செயலாளராக கட்சியில் சேர்க்கப்பட்ட உடனேயே, சோனியா காந்தி எதிர்கால சவால்களைக் கண்டறிய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு மூத்த தலைவர்கள் மற்றும் இளம் தலைவர்களின் கலவையாக இருந்தது, மேலும் கட்சியின் எதிர்கால திட்ட வரைபடத்தை உருவாக்குவதே அவர்களின் பணியாகும்.

வீரப்ப மொய்லி, திக்விஜய சிங், வயலார் ரவி, ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் போன்ற மூத்த தலைவர்களும், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் மற்றும் சந்தீப் தீட்சித் போன்ற இளம் தலைவர்களும் அடங்கிய குழுவில் ராகுலும் உறுப்பினராக இருந்தார்.

ஒரு வருடத்திற்குப் பிறகு குழு தனது அறிக்கையில் உள்கட்சி சீர்திருத்தங்கள், உள்கட்சி ஜனநாயகத்தை மேம்படுத்துதல், அமைப்பை மறுசீரமைத்தல், வலுவான தொண்டர் தளத்தை உருவாக்குதல் மற்றும் வலுவான அடித்தள அமைப்பாக கட்சியை மறுவடிவமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தது. அன்றிலிருந்து இன்று வரை அந்த அறிக்கை தூசு படிந்துக்கொண்டிருந்தது.

அறிக்கையை யாரும் பார்க்கவில்லை, அதன் பரிந்துரைகள் எதுவும் செயல்படுத்தப்பட்டதா என்பதும் யாருக்கும் தெரியாது.

அதன் பின்னர் புகழ்பெற்ற ஆண்டனி கமிட்டிகள் வருகின்றன. 1999 பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய ஏ.கே ஆண்டனி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்தார். உறுப்பினர்களில் மணிசங்கர் ஐயர், மோதிலால் வோரா, பி.எம்.சயீத் மற்றும் பி.ஆர்.தாஸ்முன்சி ஆகியோர் இருந்தனர். இந்த குழுவானது நிறுவன மற்றும் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த அறிக்கை காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வைக்கப்பட்டது, காரியக் கமிட்டி ஒப்புதல் அளித்தது, ஆனால் கட்சியில் பெரிய மாற்றம் இல்லை.

வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை, ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே இறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை, மூன்று மாதங்களுக்கு முன் இறுதி செய்ய வேண்டும், அப்போது தான் அவர்களுக்கு தேர்தலுக்கு தயார் செய்ய போதுமான அவகாசம் கிடைக்கும் என்றும், குழு பரிந்துரைத்தது. இதுவும் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.

மற்றுமொரு முக்கிய அம்சமாக, காங்கிரஸ் காரிய கமிட்டி உட்பட அனைத்து மட்டங்களிலும் தேர்தல்களை நடத்துவது, இனி பிரதிநிதித்துவ அமைப்பு இருக்க கூடாது என்று குழு கருதியது. ஆனால் காரிய கமிட்டி உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைவரால் பரிந்துரைக்கப்படுவது தொடர்கிறது. காங்கிரஸ் மிகவும் பலவீனமாக உள்ள மாநிலங்களில் கூட்டணியை உறுதிப்படுத்தவும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

1999க்குப் பிறகு, 2008, 2012 மற்றும் 2014ல் லோக்சபா தோல்விக்குப் பிறகு, ஆண்டனிக்கு மூன்று முறை கட்சியை சுயபரிசோதனை செய்யும் பணி வழங்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்ட யாரும் எதுவும் கேட்கவில்லை. உண்மையில், காங்கிரஸ் வட்டாரங்களில் ஆண்டனி கமிட்டிகளை 'முடிவற்ற குழுக்கள்' என்று ஏளனமாக அழைக்கிறார்கள்.


ராகுல் காந்தியும் மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்தார்.

ராகுல் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் அமைப்பை "ஜனநாயகமயமாக்க" புறப்பட்டார். நியமன கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதன் பல்வேறு மாநில பிரிவுகளில் தேர்தல்களை நடத்தியதற்கு பழைய தலைமையிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. இரண்டு அணிகளும் தற்போதும் தேர்தலை நடத்துகின்றன, ஆனால் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் உள்ளன.

2021 இல் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு உரையாடலின் போது, இளைஞர் அமைப்பு மற்றும் மாணவர் அமைப்பில் தேர்தலை முன்வைத்து, அதற்காக ஏற்பட்ட அழுத்தங்களால் கடுமையான அடி வாங்கியவன் நான். உண்மையில், என் கட்சியினராலேயே தாக்கப்பட்டேன். கட்சிக்குள் ஜனநாயக தேர்தல்கள் முற்றிலும் முக்கியமானவை என்று கூறும் முதல் நபர் நான்தான், ஆனால் இந்த கேள்வி வேறு எந்த அரசியல் கட்சியை பார்த்தும் கேட்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது, என்று ராகுல் காந்தி கூறினார்.

சுவாரஸ்யமாக, மற்ற தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல், தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்ததாக ராகுல் இப்போது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்து 23 மூத்த தலைவர்கள் எழுதிய கடிதமும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் விளக்கமும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் சீர்திருத்தங்களுக்கான யோசனைகள் அல்லது பரிந்துரைகளுக்கு சமீபத்திய எடுத்துக்காட்டுகளாகும்.

கடந்த ஆண்டு, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் கட்சியின் தோல்வி குறித்து ஆராய சோனியா காந்தி மற்றொரு குழுவை அமைத்தார். அசோக் சவான் தலைமையில், சல்மான் குர்ஷித், மணீஷ் திவாரி, வின்சென்ட் பாலா மற்றும் ஜோதி மணி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்த அந்தக் கமிட்டியின் அறிக்கை பற்றிய விபரங்களும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் முந்தைய பல குழுக்களின் அறிக்கையை போல் தெரியவில்லை.

எனவே பரிந்துரைகள் அல்லது யோசனைகளுக்கு பஞ்சம் இல்லை, அதேபோல் பேனல்கள், கமிட்டிகள் அல்லது குழுக்களுக்கு பஞ்சம் இல்லை, ஆனால் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் தன்னை மாற்றிக்கொள்ள கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தேவையான மாற்றங்களை மறுக்கும் கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி தலைமை பெரிய மாற்றங்கள் ஏற்படுமா என கட்சியில் பெரும் பகுதியினர் சந்தேகம் கொள்வதில் ஆச்சரியமில்லை.

இப்படிப்பட்ட நிலையில், இன்னொரு சிந்தனை முகாம் என்ன சாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Updated On: 10 May 2022 1:06 PM GMT

Related News