/* */

என்ன செய்யப்போகிறார் ஓ.பி.எஸ்.? இனியும் பா.ஜ.,வுடன் கூட்டணி உண்டா?

ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்ல, இதற்கு குறுக்கே வந்து பாஜக முட்டுக்கட்டையை போட. அப்பறம் என்னாச்சு தெரியுமா?

HIGHLIGHTS

என்ன செய்யப்போகிறார் ஓ.பி.எஸ்.? இனியும் பா.ஜ.,வுடன் கூட்டணி உண்டா?
X

ஓ.பன்னீர் செல்வம் (பைல் படம்).

பொதுக்குழு தீர்ப்பு சமீபத்தில் வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் & டீம் பெருத்த அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளதாக தெரிகிறது. பொதுக்குழு தொடர்பாக அப்பீலுக்கு இனி போனாலும்கூட, சிவில் வழக்குகளில் உடனே தீர்ப்புகள் வரப்போவதுமில்லை. அதனால் தான், தனிக்கட்சி என்ற யோசனையை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

"அம்மா திராவிட முன்னேற்ற கழகம்" என்பது உட்பட 3 பெயர்கள், புதிய கட்சிக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் கொடி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதிமுக கொடி நிறத்தில், சிறிய உருவிலான அண்ணா படம், கொடி நடுவில் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் செங்கோல் வழங்கும் படம் இடம்பெறும் வகையில், கொடியை வடிவமைக்க ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த முடிவுக்கு, பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாம்.. "இப்போதைக்கு தனிக்கட்சி வேண்டாம், டிசம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள். தேவைப்பட்டால், தாமரை சின்னத்தில் போட்டியிடலாம்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பிலிருந்தே பேச்சு நடத்தப்பட்டதாம்.

இந்த பேச்சுவார்த்தையை யார் நடத்தினார்கள்? இதற்கு ஓபிஎஸ் டீமின் ரியாக்‌ஷன் என்பது குறித்து, ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான சீனியர் ஒருவரிடம் விசாரித்ததில் "தனிக் கட்சி ஆரம்பிக்கிறீர்களா?" என்று சமீபத்தில் ஓபிஎஸ்சிடம், பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "பொறுத்திருந்து பாருங்கள்" என பூடகமாக பதிலளித்தார். அதனால், தனிக்கட்சியை விரைவில் தொடங்குவார் என்கிற யூகங்கள் ரெக்கைக் கட்டிப் பறந்தபடி இருக்கிறது.. அதற்கேற்றவாறு, தனிக்கட்சி மூடிலேயே ஓபிஎஸ்ஸும் இருக்கிறார் என்று ஒரு தகவல் பாஜக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டதாம்.

அதற்கு பிறகு தான், ஓபிஎஸ்ஸிடம் அமித்ஷா பேசியதாக கூறினார்கள். இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.. ஆனால், ஓபிஎஸ்சிடம் அமித்ஷா நேரடியாக பேசவில்லை. அமித்ஷாவுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் பாலமாக இருக்கும் குஜராத் பிரமுகர் மூலமால ஓபிஎஸ்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதாவது, 'தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக தகவல் வருகிறது. அப்படி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். சில மாதங்கள் வெயிட் பண்ணுங்க. எல்லாமே நல்லபடியாக நடக்கும்' என்று அந்த குஜராத் மீடியேட்டர் சொல்லியிருக்கிறார். ஆனால், ஓபிஎஸ் இதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அமித்ஷாவின் ஆளான குஜராத் மீடியேட்டர் பேசியதை பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தார் ஓபிஎஸ்.

அதற்கு அவர்கள், "இனியும் பாஜகவை நம்பி அரசியல் பண்ணுவது வேஸ்ட்.. நம்பி நம்பி மோசம் போகியிருக்கிறோம்... ஏமாந்துவிட வேண்டாம். ஏன்னா, சட்டரீதியாக அதிமுகவுக்கு உரிமை கோரும் அனைத்து வழிகளும் நமக்கு அடைக்கப்பட்டு விட்டது. இதற்கு பாஜக தான் காரணம். டெல்லியை பொறுத்தவரை எடப்பாடிக்கு சாதகமாக நடப்பதையே விரும்புகின்றனர்.

அதனால், தேர்தல் வரை நாம் எந்த முடிவையும் எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டே வந்து, கடைசி நேரத்தில் நம்மை கழட்டிவிட்டுவிட்டு எடப்பாடியிடம் கை கோர்ப்பார்கள். எனவே, பாஜகவை நம்பி வீணாவதை விட , நமக்கான அரசியலை முன்னெடுப்பது தான் புத்திசாலித்தனம். திமுகவுடன் கூட்டணி வைக்க முடியுமா? என்று ஆராயலாம். அதுதான் நடைமுறையை உணர்ந்த அரசியலாக இருக்கும் என்று சீனியர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, பாஜக வீசும் வலையில் ஓபிஎஸ் சிக்கமாட்டார்.. இப்போதைக்கு இதுதான் ஓபிஎஸ் தரப்பில் இருக்கிறது என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான சீனியர்.


இந்த நேரத்தில் நாம் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்தபேட்டியில், நாங்கள் தனித்து நிற்போம் என்றும், பாஜகவுடன் ஓபிஎஸ் இல்லை என்றும் அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.

இப்போது என்றில்லை, கடந்த ஒரு வருட காலமாகவே, பண்ருட்டியாரின் அரசியல் இப்படித்தான் இருந்து வருகிறது.. பாஜக பக்கம் விழுந்து கிடப்பதைவிட, மக்களை சென்று நேரடியாக சந்திப்போம் என்று ஓபிஎஸ்ஸூக்கு வழிகாட்டியதால் தான், இன்று திருச்சி மாநாடு, காஞ்சிபுரம் மாநாடு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை ஓபிஎஸ் தரப்பு முன்னெடுத்து வருவதை மறுக்க முடியாது.

தங்கள் பலத்தை முதலில் நிரூபிப்போம், தொண்டர்களை சந்திப்போம், பாஜக விவகாரமெல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம் என்பதே பண்ருட்டியாரின் முக்கிய அட்வைஸாக தெரிகிறது..

அந்தவகையில்தான், தனிக்கட்சி விஷயத்திலும் பண்ருட்டி உள்ளிட்ட சீனியர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அப்படியானால், தனிக்கட்சியை ஓபிஎஸ் நிச்சயம் தொடங்குவாரா? அப்படி தொடங்கினால் பாஜக என்ன மாதிரியாக ரியாக்ட் செய்யும்? என்று தெரியவில்லை. காலம் இனி என்னென்ன கோலங்கள் போடுமோ.

Updated On: 30 Aug 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  3. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  7. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  10. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...