/* */

தேசத்தின் மகன் மோடி தான்..! பா.ஜ.க.,வினர் கடும் ஆவேசம்..!

இந்த தேசத்தின் மகன் மோடி தான் என பா.ஜ.க.,வினர் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தேசத்தின் மகன் மோடி தான்..! பா.ஜ.க.,வினர் கடும் ஆவேசம்..!
X

தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையுடன் மருத்துவப்பிரிவு நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,

இந்திய நாட்டின் மகன் மோடிதான் என்று ஆவேசமாக கூறிவரும் பாஜகவின் பா.ஜ.க., மருத்துவப்பிரிவு நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:

ஜெயலலிதா அனைவருக்கும் அம்மா ஆக முடியும். சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும். மாயாவதி சகோதரி ஆக முடியும். நேரு மாமா ஆக முடியும். காந்தி தேசப்பிதா ஆக முடியும். ஆனால் மோடி மட்டும் தேசத்தின் மகன் ஆகக்கூடாதா..? இவ்வளவு வெறுப்பு ஏன்? உங்கள் கோபம் பெட்ரோல் விலை மீது இல்லை.

உங்களால் முன்னைப் போல பொய் பில்களை காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை. ஜிஎஸ்டியில் முறையாக கணக்கு காண்பித்து வியாபாரம் செய்ய மனசே வரமாட்டேனென்கிறது. இன்னமும் "அவன் திருடுகிறான், இவன் திருடுகிறான் " என்று சொல்லிச் சொல்லி உங்களை சரி செய்து கொள்ள மறுக்கிறீர்கள். உங்களால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை.

இலட்சக்கணக்கான போலி குடும்ப கார்டுகள் ஒழிக்கப்பட்டு அரசு மானியம் இப்போது நேரடியாக அவரவரது வங்கி கணக்கில் வருகிறது. இதனால் மட்டும் ஆண்டு தோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு (அரசுக்கு) மீதமாகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் 8 மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும் இருந்தது.

இப்போது அசுர கதியில் மின் உற்பத்தி செய்யப்பட்டு தேசத்தின் பிரதான கிரிட்டுகளோடு மின் இணைப்புகளை பலப்படுத்தியதில் இன்று ஜீரோ மின்வெட்டு ஆக உள்ளது. 60 ஆண்டாக மின்சாரம் செல்லாத 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாமானியனுக்கும் ஐந்து இலட்ச ரூபாய்க்கு இலவசமாய் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தைரியமாக இனி எந்த மருத்துவமும் பார்க்கலாம்.

ஜெனிரிக் மருந்துகள், ஸ்டென்ட், மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகசாலை 73% வளர்ச்சி அடைந்துள்ளன. ரயில்வே நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முதலீடு அதிகரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை நட்பு நாடுகளுடன், வளர்ந்த நாடுகளுடன் உறவுகள் மேம்பட்டுள்ளன. விவசாயிகளூக்கு தட்டுபாடில்லா உரம், இஸ்ரேல் தொழில் நுட்பம், இடுபொருள் சிலவற்றிற்கு மேல் 150% கொள்முதல் விலை. E-commerce மின் வர்த்தகம் என ஒட்டுமொத்த நாடே நிமிர்ந்து நிற்கிறது.

இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பிரதமர் சொத்து சேர்க்க அவருக்கு குடும்பமும் இல்லை. காக்கா பிடிக்கும் , சலாம் போடும் ஏன்... துறை அறிவே இல்லாத பொழுதும் "ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் " என்ற பயத்தில் அரை வேக்காடுகளை கூட மத்திய அமைச்சராக ஆக்கும் அசிங்கம் மருந்துக்கும் இல்லை. ஆட்சியாளர்கள் கொள்ளை நின்று விட்டது.

அந்த கோபம் இப்போது மோடி மீது.. பாய்கிறது. மோடி மற்றவர்கள் போல் குடும்பத்திற்காக கொள்ளையடித்து சொத்து சேர்த்தாரா. அவர்கள் குடும்பத்தினர் இன்றும் ஆட்டோவில் பயணம் செய்து வருகின்றனர். மோடி ஒரு நாளுக்கு16 முதல்18 மணி நேரம் நாட்டுக்காக நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைக்கிறார்.

இன்னுமொன்று... அப்படியே பெட்ரோல் விலையை நீங்கள் சொல்வதையும் தாண்டி ஐம்பது ரூபாய்க்கே கொடுத்தாலும் வாழ்த்தி விடவா போகிறீர்கள்...? வாக்குச்சீட்டு போலி என்றோ, வாத்து முட்டைகள் கறுப்பு என்றோ கூவத்தானே போகிறீர்கள்...? முதலில் பார்வையை சரி செய்யுங்கள்.

தப்புத், தப்பாகவே எதையும் பார்த்து விட்டால் , நூறு சதம் சரியானது கூட தப்பித்து விடும் பார்வையிலிருந்து.....உங்களது ஆவேச பேச்சுக்கும், ஜாதிய இனமான வீச்சுக்கும் உணர்ச்சி வசப்பட்டு வீழ்ந்து விடும் தமிழ் மக்கள் விழித்துக் கொண்டனர். என்ன நடந்திருக்கிறது? எப்படி நடந்திருக்கிறது ? என்று மாற்றங்களை கண்கூடாக பார்த்து , உணர்ந்து , புரிந்து கொண்ட பிறகே ஓட்டுப் போடும் அளவுக்கு மக்கள் மாறி விட்டனர். உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால் மாறுங்கள். உங்கள் வருங்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். "மோடி" பிரதம மந்திரி அல்ல.....! அவர் ஒரு கண்டிப்பான பள்ளிக்கூட வாத்தியார்.....! என்பதை நினைவில் வையுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Updated On: 20 March 2024 4:58 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...