/* */

தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்தின் துவக்க களமாக மாறிய திருச்சி

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய முக்கிய அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தின் துவக்க களமாக திருச்சி மாறி உள்ளது.

HIGHLIGHTS

தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்தின் துவக்க களமாக மாறிய திருச்சி
X

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் துவக்க களமாக திருச்சி மாறி உள்ளது.

18 வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது தமிழகத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியையும் சேர்த்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு சரியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் தி.மு.க.வை பொருத்தவரை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ். விடுதலை சிறுத்தைகள். மதிமுக.,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து விட்டு திமுக வேட்பாளர்களை மட்டும் அறிவிக்க வேண்டிய இறுதிக்கட்டத்தில் உள்ளது.ஆனாலும் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்பது முடிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் வருகிற 22ஆம் தேதி தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருச்சி மாவட்டம் சிறுகனூரில் 22 ஆம் தேதி மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு திருச்சி ,பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.திருச்சி பொதுக் கூட்டத்தில் முடித்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார்.

திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் பணிகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க அ.தி.மு.க.வில் என்னும் கூட்டணியே இறுதி செய்யப்படாத நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத் திட்டத்தை அறிவித்துவிட்டார். அவரும் திருச்சியில் தான் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முதல் கட்டமாக தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின்னர் அவர் தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக திருச்சி தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால் அரசியல் கட்சிகளின் மாநாடுகள் தான் பெரும்பாலும் திருச்சியில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தற்போது அதற்கு ஒரு படி மேலே போய் திமுக, அதிமுக ஆகிய இரு முக்கிய அரசியல் கட்சிகளும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் களமாகவும் திருச்சியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 March 2024 6:23 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  2. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  3. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  4. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...